வசித்தல்

வசித்தல்

நான் ஒரு வீட்டை எவ்வாறு தேடிக்கொள்வது?

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பற்றிய விளம்பரங்களை உங்கள் வட்டார அரசிதழ், தினசரி செய்தித்தாள்கள் மற்றும் இணையத்தில் காணலாம். மைஃக்ரோஸ் மற்றும் கூப் போன்ற மிகப் பெரிய பல்பொருள் அங்காடிகளின் வாடிக்கையாளர் அறிவிப்பு பலகைகளில், குறைந்த விலை வீடுகள் பற்றிய குறிப்புகள் சிலசமயம் இடம்பெற்றிருக்கும்.

 

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் பொதுவாக ஒரு பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் வசூல் பதிவேடு தகவல்கள் மற்றும் உங்கள் வசிப்பிட அனுமதி போன்ற ஆவணங்களின் நகல்களை சேர்த்து அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அல்லது மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

முக்கியமானவை:

 

  • அடுக்குமாடி குடியிருப்பு விளம்பரத்தின் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள்; வாடகைதாரரை உரிமையாளர் தேர்வு செய்கிறார்.
  • எத்தனை மாதத்துக்கு போன்ற வாடகை ஒப்பந்த விதிமுறைகளை கவனமாகப் பார்க்கவும்.
  • வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில், அங்கு பிற வீடுகளில் வசிக்கும் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை காக்கும் வகையில் கட்டிட விதிமுறைகள் இருக்கும் (உதாரணமாக இரவு நேரங்களில் அமைதி காத்தல், சலவை இயந்திர பயன்பாடு போன்றவை).
  • ஒவ்வொரு குடியிருப்பிலும் குடியிருப்புகள் உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக பராமரிக்கப்படுவதையும், கட்டிட விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய பராமரிப்பாளர் ஒருவர் இருப்பார்.
  • ஒவ்வொரு வீட்டுக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பெறுவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இதனை ஃபிரைபர்க்கிலுள்ள சுவிட்சர்லாந்து வசூல் துறையின் கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்ய வேண்டும்