தனிப்பட்ட சேதங்களைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி

தனிப்பட்ட சேதங்களைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி

தனிப்பட்ட சேதங்களைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி எனக்குத் தேவையானதா?

நீங்கள் வேறொருவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் முழுச் சேமிப்புகளையும் அதற்காகச் செலுத்த வேண்டி ஏற்படலாம். ஆகவே தனிப்பட்டவர்கள் அதேபோன்று குடும்பங்களுக்கு ஒரு தனிப்பட்ட காப்புறுதி செய்து, அது இப்படியான பாதிப்புகளைப் பொறுப்பெடுப்பது முக்கியமானதாகும். அதிக வேளைகளில் வீட்டை வாடகைக்குத் தருவோர் மற்றும் அதன் நிர்வாகங்கள் தனிப்பட்ட சேதங்களைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி ஒன்றைச் செய்து கொள்ளுமாறு கேட்பார்கள்.

 

சுவிசில் இப்பேற்பட்ட காப்புறுதிகளை செய்து கொள்ள பலதரமான நிறுவனங்கள் உள்ளன. அவர்களின் செயற்பாடுகளும் அவர்கள் அதற்காக கோரும் பணத் தொகையும் சரியான வித்தியாசமாகவுள்ளது. ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் நல்லது.