வாடகைக் கட்டணம்

வாடகைக் கட்டணம்

வாடகையில் எந்தச் செலவுகள் அடங்கியிருக்கும்?

முதலில் வீட்டுக்கு, வாடகை ஒப்பந்தத்தில் தீர்மானித்தவாறு மாதாந்த வாடகைப் பணம் செலுத்த வேண்டும். மேலதிகக் கட்டணமாக மின்சாரம் அல்லது எரிவாயு, தொலைபேசித் தொடர்பு, இணையத் தொடர்பு அல்லது கேபிள் தொலைக்காட்சி என்பனவும் அதனுடன் சேர்ந்திருக்கும்.

 

மேலதிகக் கட்டணத்துடன் சேர்ந்து வீட்டைச் சூடாக்குதல், தண்ணீர், வீட்டுப் பராமரிப்பு, தோட்டப் பராமரிப்பு, தண்ணீர் வெளியேற்றம், குப்பை எடுக்கும் செலவு மற்றும் வேறு சில செலவுகளும் அமைந்திருக்கும். மேலதிகக் கட்டணங்கள் வாடகை ஒப்பந்தத்தில் எப்பொழுதும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அவை தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட மாட்டாது. மேல திகக் கட்டணங்கள் பகுதிரீதியாக வாடகைக்கு வசிப்போரிடமிருந்து பிரித்துப் பெறப்படும். சில மேலதிகக் கட்டணங்கள் உள்ளன அவற்றை வாடகைக்கு இருப்போரிடமிருந்து அறவிட முடியாது.

 

மேலதிகக் கட்டணத்தில் ஒரு பகுதியை வழமையாக நீங்கள் மாதாந்த வாடகைக் கட்டணத்துடன் சேர்த்து செலுத்துவீர்கள். இதை (Akontozahungen) என அழைப்பர். குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இறுதிக் கணக்கு விபரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். இறுதிக் கட்டணத்தை விடக் குறைவானதாக இருப்பின், மிகுதித்தொகையை நீங்கள் மேலதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.செலவு அதிலும் பார்க்கக் குறைவானதாக இருப்பின், நீங்கள் மேலதிகமாகச் செலுத்திய தொகை உங்களுக்கு மீளத் தரப்படும். இறுதிக் கணக்கு விபரத்தை சரியாகப் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அது உங்களுக்கு நன்மை தரும்.

 

வீட்டு வாடகை முற்பணத்தை வைப்பிலிடுவது என்றால் என்ன?

வீட்டு வாடகை முற்பணத்தை வைப்பிலிடுவது- முற்பணம் என அழைக்கப்படுவது- வீட்டை வாடகைக்கு வழங்குபவருக்குப் பாதுகாப்புப் பணமாக அமைகிறது; அதாவது வீட்டுவாடகை செலுத்தாவிட் டால், மேலதிகக் கட்டணங்களைக் கட்டாதிருந்தால் அல்லது வீட்டில் சேதங்களை ஏற்படுத்தினால், அவை உங்கள் மேல் சுமத்தப்படும். இந்த முற்பணம் ஆகக் கூடியது மூன்று மாத வாடகைப் பணத்தின் அளவாக இருக்கும். இது வாடகைக்கு இருப்போரால் ஒரு விசேட வங்கிக் கணக்கில் (வைப்பிடுவது- அல்லது முற்பணக் கணக்கு) வைப்பிலிடப்படும் இந்த வங்கிக் கணக்கு வாடகையாளரின் பெயரிலேயே இருக்கும். வழமையாக இந்த முற்பணமும் வட்டியும் நீங்கள் வீட்டி லிருந்து வெளியேறும்போது உடனடியாக திருப்பி வழங்கப்படும். இருப்பினும் வீட்டிற்கு இதுவரை செலுத்தப்படாத வாடகை மற்றும் பாதிப்புக்களுக்கான செலவுகள் அதிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

 

ஒரு காப்புறுதி நிறுவனத்திலும் வாடகை முற்பணப் பொறுப்பு எனும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்தமுற்பணப் பொறுப்பு காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகச் செய்துகொள்ளப்படும். இந்தச் சேவைக்கு வருடாந்தக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதிலுள்ள நன்மை: உங்கள் பணம் முற்பணமாக வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்காது அதை நீங்கள் உங்கள் தேவைக்குப் பயன்படுத் தலாம். இதிலுள்ள தீமை: நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஒருசில நூறு பிராங்குகள் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். முற்பணத்தை நீங்கள் சொந்தமாக வைப்பிலிடுவது மிகவும் இலாபகரமானது.