வீட்டு ஒழுங்குகள்

வீட்டு ஒழுங்குகள்

நான் ஒரு ஆண் மற்றும் பெண் வாடகையாளராக எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

பல குடும்பங்கள் வாழும் இல்லத்தில் வாழ்பவர்கள் ஒருவர் ஒருவரில் அக்கறை கொள்வது, ஒரு சிறப்பான, சமாதானமாக ஒன்றுசேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகள் தேவைப்படுகின்றது. இவை வீட்டு ஒழுங்கில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். சில முக்கிய புள்ளிகள் கீழே தரப்படுகின்றன:

 

  • இரவு அமைதி: இது வழமையாக 22 தொடக்கம் 7 மணிவரை, மதிய அமைதி 12 தொடக்கம் 13 மணி வரை. இந்த நேரங்களில், தொலைக்காட்சி மற்றும் இசைக் கருவிகளை அறைக்கு ஏற்ற சத் தத்தில் வைத்துக் கொள்வதுடன் சத்தமான வேலைகளைச் செய் யாதிருக்க வேண்டும். அத்துடன் ஞாயிறு- மற்றும் விடுமுறை நாட்களில் சத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். எவராவது ஒரு விழாவிற்கு நண்பர்களை அழைத்தால், அவர்கள் தமது அயலவருக்கு முன்கூட்டியே இது குறித்து அறியத்தருவது சிறந்தது.
  • ஒன்றுசேர்ந்து பாவிக்கும் இடங்கள்/அறைகள்: வீட்டு நுழைவாயில், வீட்டுப் படிகள், பொருட்கள் வைக்கும் இடங்கள், சலவை அறை போன்றவை அனைத்து வாடகையாளருக்கும் பொதுவானது. இந்த இடங்களில் சொந்தப் பொருட்களை வைத்துக் கொள்ளாமலிருப்பதுடன் அதன் துப்பரவையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • சலவை அறை: சலவை அறையைப் பயன்படுத்தும் விதிகளைக் கவனத்தில் கொள்வதுடன் சலவை முடிந்ததும் எப்பொழுதும் துப்பரவாக விட்டுச் செல்லுங்கள்.
  • புகைத்தல்: பல வீடுகளில் வீட்டுப் படிகளில், பொதுவாகப் பாவிக்கும் அறைகளில் அல்லது பாரம் தூக்கும் லிப்ற்றிற்குள் புகைத்தல் அனுமதிக்கப்பட்டிருக்காது. சில வீடுகள் உள்ளன, அவை புகைக்காதவர்களுக்கு மட்டுமே வாடகைக்கு வழங்கப்படும்.
  • கேள்விகள்: தற்சமயம் உங்களுக்குக் கேள்விகள் இருப்பின், சிறப்பாக வீட்டுப் பராமரிப்பாளர், நிர்வாகம் அல்லது வாடகைக்கு வழங்கியவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.