ஆலோசனை

ஆலோசனை

நான் எங்கு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்?

சுவிசில் பல்வேறு அமைப்புகள், வீட்டு விடயங்கள் குறித்துக் கவனித்துக் கொள்கின்றன. இதில் ஒன்று ஆண்- மற்றும் பெண் வாடகையாளர் சங்கம். இது ஆண் மற்றும் பெண் வாடகையாளர் சார்பாகவும் அவர்களது உரிமைக்காகவும் ஈடுபடுவதுடன், தமது உறுப்பினர்களுக்கு ஆலோசனை மற்றும் மேலதிக சேவைகளையும் வழங்குகின்றது.

 

அத்துடன் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் திணைக்களத்திடமிருந் தும் நீங்கள் வாடகை, உடன்பாட்டை கைவிடுதல், வாடகையை உயர்த்துதல் அல்லது முற்பணத்தைத் திரும்பப் பெறல் போன்ற கேள்விகள் இருப்பின் அது குறித்து அறிந்து கொள்ளலாம். இதன்போது எழும் பிரச்சினைகளில் இவர்கள் வாடகையாளருக்கும் வாடகைக்கு வழங்கியவருக்கும் இடையே நடுநிலைமை வகித்து சமரசம் செய்து கொள்வர். இந்த ஆலோசனை மற்றும் நடவடிக்கைகள் இலவசமானதாகும். இந்த ஆலோசனைத் தவணைக்கு அனைத்துப் பத்திரங்களும் எடுத்துச் செல்ல வேண்டும், அனைத்திலும் மேலாக நிச்சயமாக வாடகை ஒப்பந்தம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

 

Graubünden மாநிலத்தில் சமரச அலுவலகர்கள் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடனான தொடர்பு முகவரியை „Justiz Graubünden“ இணையத்தளத்தில் நீங்கள் காணலாம் (நீதித்துறை Graubünden).

தொடர்பு

  • Mieterinnen- und Mieterverband Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden குடியிருப்பாளர்கள் அறக்கட்டளைPostfach 3617004 Chur081 534 05 95www.mieterverband.ch