கழிவு

கழிவு

கழிவு

ஒரு அடிப்படைக் கொள்கையாக, கழிவுகளை அப்புறப்படுத்துதல் என்பது கட்டணத்துக்குட்பட்ட சேவையாகும். நீங்கள் வசிக்குமிடத்தின் நிர்வாகத்திடமிருந்து எது, எப்போது, எங்கு அப்புறப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறலாம்.

 

கழிவுகளைப் பிரித்தல்

 

கழிவுகளைப் பிரித்து அப்புறப்படுத்துதல் என்பது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பளிக்கும் மற்றும் செலவுகளைக் குறைக்கும். பின்வருபவை வீட்டுக் கழிவுகளில் இருந்து பிரிக்கப்படுபவையாகும்.

 

  • கண்ணாடி மற்றும் குவளைகள்
  • காகிதம் மற்றும் அட்டை
  • மட்கும் குப்பை மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள்
  • பெரியக் கழிவுகள் (எடுத்துக்காட்டாக மரச்சாமான், தரைவிரிப்புகள்) மற்றும் இரும்பு
  • பேட்டரிகள் மற்றும் மின்சார சாதனங்கள்
  • மருந்துப் பொருட்கள்
  • எண்ணெய்கள் மற்றும் பெயிண்டுகள், வார்னிஷ்கள், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் முதலியன
  • அணியக்கூடிய நிலையிலுள்ள துணிமணிகள்

 

கண்ணாடி, அலுமினியம், PET போன்றவற்றை கொள்கலன் சேகரிப்பு மையங்கள் அல்லது மறுசுழற்சி நிலையங்களில் அப்புறப்படுத்தலாம். பெரிய கழிவு, காகிதம், அட்டை மற்றும் பிரத்யேகக் கழிவு ஆகியவற்றை மறுசுழற்சி நிலையங்கள் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு சில சூழ்நிலைகளில் கட்டணம் விதிக்கின்றன. பல கடைகள் பேட்டரிகள் மற்றும் மின்சார சாதனங்களை இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்கின்றன.