பொதுப் போக்குவரத்து

பொதுப் போக்குவரத்து

பொதுப் போக்குவரத்தில் எவ்வித மலிவான கட்டணங்கள் உள்ளன?

SBB மற்றும் RhB ஆகியவை பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை மலிவு விலையாக்கும் பல்வேறு பயண அட்டைகளை (உதாரணத்திற்கு பாதி விலை பயண அட்டை (Halbtax), பொதுப் பயண அட்டை (GA), மாதாந்திர பயண அட்டை (Monatsabo), க்லெய்ஸ் 7 (Gleis 7), ஜூனியர் பயண அட்டை (Juniorkarte)) அளிக்கிறது.

 

பொதுப் போக்குவரத்துக்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மலிவான நாள் பயணச்சீட்டுக்களை உள்ளுராட்சிசபை ஒதுக்கியுள்ளது. இதனுடன் ஒருநாள் முழுவதும் முழு சுவிசிலும் அனைத்துப் பொதுப்போக்கு வரத்துச்சாதனங்களையும் பாவித்துக் கொள்ளலாம். இந்த முழுநாள் பயணச் சீட்டு மிகவும் விரும்பப்படுபவை. ஆகவே நீங்கள் ஒரு குறிப்பி ட்ட நாளில் இந்தப் பயணச்சீட்டைப் பாவிக்க விரும்பினால், நேரகாலத் துடன் உங்கள் உள்ளுராட்சிபையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.