ஒருவர் தன்னை சாரதிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு, ஒருசில நிபந்தனைகள் தேவைப்படும்:
- நீங்கள் ஆகக் குறைந்தது 18 வயதாக இருத்தல் வேண்டும்.
- நீங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்தில் உதவும் பாடத்திற்குச் (உயிர்காக்கும் உடனடி நடவடிக்கைகளுக்கான பாடம்)செல்ல வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கண் பரிசோதகரால் கண் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி பெறவேண்டும்.
- நீங்கள் போக்குவரத்துப் பற்றிய பாடத்தை ஒரு அனுமதிக்கப்பட்ட சாரதிப் பயிற்சியாளரிடம் கற்றிருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு எழுத்து மூலமான பாடப் பரீட்சையில் சித்திபெற வேண்டும், இதில் நீங்கள் போக்குவரத்து விதிகள் குறித்து விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான அளவில் சாரதிப் பாடசாலையில் செய்முறையை மணித்தியாலங்களைப் பெற்றிருக்க வேண்டும். சுவிசில் சாரதிப் பாடசாலைக் கட்டணங்கள் மிகவும் உயர்ந்தவை, ஒரு மணித்தியாலத்திற்கு ஏறத்தாழ 100 பிராங்குகள் செலவாகும்.
நீங்கள் இதுகுறித்து வீதிப்போக்குவரத்துத் திணைக்களத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது ஒரு சாரதிப் பாடாசலையில் அல்லது ஆண் அல்லது பெண் சாரதி பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெறலாம்.