சுவிஸ் சாரதிப்பத்திரம்

சுவிஸ் சாரதிப்பத்திரம்

ஒரு சுவிஸ் சாரதிப்பத்திரத்தை நான் எவ்வாறு பெறுவது?

நீங்கள் உங்கள் சாரதிப்பத்திரத்தை சுவிசில் அங்கீகரிக்கும் வகையில் சுவிசுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் நாட்டிலிருந்து வருகைதந்திருப்பீர்களானால் நீங்கள் இதற்காகத் தேவைப்படும் பத்திரங்களை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின் நீங்கள் ஒரு சுவிஸ் சாரதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் இது எவ்விதம் இடம்பெறுகின்றது என்பதை வீதிப்போக்குவரத்துத் திணைக்களத்திலோ அல்லது இணையத்தளத்திலோ அறிந்து கொள்ளலாம்.

 

நீங்கள் சாரதிப்பத்திரத்தை சுவிசில் அங்கீகரிக்கும் வகையில் சுவிசுடன் ஒப்பந்தம் செய்யாதிருக்கும் நாட்டிலிருந்து வருகைதந்திருப்பீர்களானால்.குறைந்தது ஒரு பரீட்சார்த்த ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.இதை தயார்படுத்துவதற்கு ஒருசில மணித்தியாலங்கள் ஒரு சாரதிப் பயிற்சியாளரிடம் பழகிக்கொள்வது சிறப்பானதாகும்.

 

நீங்கள் முதலில் ஒரு மோட்டார் வாகனத்தைச் செலுத்துவதற்கு பயில விரும்பினால் அதற்கு ஒரு பயிலுனர் சாரதி அடையாள அட்டை தேவைப்படும். இது நீங்கள் முதலில் இதற்கான பாடப் பரீட்சையில் சித்தியடைந்தால் உங்கள் மாநிலத்திலுள்ள வீதிப்போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும். கற்கும் ஆண் அல்லது பெண் சாரதிகளுடன் இன்னும் ஒருவர் சேர்ந்து செல்ல வேண்டும், அவர் 23வயதை நிறைவுசெய்தவராகவும் குறைந்தது 3 வருடங்கள் இதற்கான தராதரமுடைய ஒரு செல்லுபடியான சாரதிப்பத்திரத்தை வைத்திருப்பவராகவும் இருப்பதுடன் அவரது சாரதிப்பத்திரம் பரீட்சிக்கும் காலத்துக்கானதாகவும் இருக்கக்கூடாது.

தொடர்பு

தொடர்பு

  • Strassenverkehrsamt des Kantons Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden மாகாணத்தின் சாலைப் போக்குவரத்து உரிமம் வழங்கல் துறைRingstrasse 27001 Chur081 257 80 00www.stva.gr.ch