சுவிஸ்

பொருளாதாரக் கிளைகள்

சுவிசில் எவை மிக முக்கிய பொருளாதாரக் கிளைகளாக உள்ளன?

சுவிஸ் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு தாராளமயமான பொருளாதாரக் கொள்கை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வெளிநாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணுவது காரணமாகின்றது. இயற்கையிலேயே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் தமது உயர்வுள்ள தராதரமான செயற்பாடுகளின் ஊடாக இப்படியான வெற்றிக்குத் தமது பங்களிப்பை வழங்குகின்றனர்.

 

சுவிசில் பாரிய பொருளாதாரப் பகுதிகளில் துறைசார் சேவைகளான வங்கிகள் மற்றும் காப்புறுதிகள்- உல்லாசப் பயணம்- மொத்த- மற்றும் சில்லறை வியாபாரம்- பொதுப்பணி நிர்வாகம் மற்றும் சமூகக் காப்புறுதிகள் உள்ளன. அத்துடன் சுவிசின் பொருளாதாரத்துறைக்கு முக்கிய பங்குவகிக்கும் தொழிற்சாலைத் துறைகளான இயந்திர- மின்சார- மற்றும் உலோகத் தொழிற்சாலை இரசாயன மற்றும் மருந்துப் பொருட்கள் தொழிற்சாலை மருத்துவத் தொழில்நுட்பம் உணவு உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் கடிகாரத் தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு சிறிய பொருளாதாரத்துறையாக விவசாயம் உள்ளது.

 

2017ம் ஆண்டில் 590´000 பொருளாதாரச்சந்தை நிறுவனங்கள் சுவிசில் இருந்துள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கால் பங்கு துறைசார் சேவைகளாகப் பணியாற்றியுள்ளது. சுவிசில் 99 வீதத்திற்கு மேலான அனைத்து நிறுவனங்களும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும் (KMU); இந்த நிறுவனங்கள் 250க்கு குறைவான தொழிலாளர்களைக் கொண்டது. ஏறத்தாழ 89 வீதமானவை சிறிய- நிறுவனங்கள் அதாவது இவை 10 தொழிலாளர்களுக்குக் குறைவானவர்களைக் கொண்டுள்ளார்கள். மூன்றில் இரண்டு தொழிலாளர்கள் KMUல் வேலை செய்கின்றனர் மூன்றில் ஒன்று பெரிய நிறுவனங்களிலாகும் (ஆதாரம்: கணக்கெடுப்புக்கான மத்திய திணைக்களம் நிலை 2017).