சுவிஸ்

மொழிகள்

மொழிகள்

பன்மொழிகளைப் பேசுவது சுவிசின் ஒரு அடையாளச் சின்னமாகும். இங்கு நான்கு உத்தியோகபூர்வமான மாநில- மற்றும் திணைக்கள மொழிகள் உள்ளன. டொச்- பிரெஞ்சு- இத்தாலி மற்றும் றெற்ரோறொமானிஸ். எவராவது சுவிசில் வளர்ந்திருந்தால்- பாடசாலையில் இந்த மொழிகளில் இரண்டைக் கற்றிருப்பார். அதிகமாக நாளாந்த வாழ்வில் தமது சொந்தத் தாய்மொழியைப் பேசிக்கொள்ளவர். மொழிக் குழுக்கள் அதிக வித்தியாசமான அளவுகளைக் கொண்டது:

 

  • 62.6 வீதமான வசிக்கும் மக்கள் டொச்சை பிரதான மொழியாகப்
  • பேசுகின்றனர்
  • 22.9 வீதம் பிரெஞ்சு
  • 8.2 வீதம் இத்தாலியம் (சுவிசில் வசிக்கும் ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்கள் சேர்த்துக் கணக்கிடப்பட்டுள்ளனர்)
  • மற்றும் 0.5 வீதம் றெற்ரோறொமானிஸ் பேசுகின்றனர்.

 

சுவிஸ்- பிரஜைகளாக இல்லாமல் வசிக்கும் மக்கள் மேலதிக மாக பல்மொழி பேசுபவர்களாக உள்ளார்கள் அதாவது: 24.3 வீத மானோர் சுவிசின் நான்கு மாநில மொழி தவிர்ந்த வேறொரு மொழியைப் பிரதான மொழியாகவும் முழு மக்களில் 18.5 வீத மானோர் ஒன்றுக்கு மேலான பிரதான மொழிகளைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். (ஆதாரம்: கணக்கெடுப்புக்கான மத்திய திணைக்களம், நிலை 2017)