சுவிஸ்

சமயங்கள்

சுவிசில் எந்த சமயங்கள் உள்ளன?

கிறிஸ்தவம் நாட்டில் மிகவும் பரந்து விரிவடைந்துள்ள ஒரு சமயமாகும். இதில் முக்கியமாக உரோமன் கத்தோலிக்கம் மற்றும் புரொட்டொஸ்தாந்து ஆலயங்கள் இதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த சமயங்களில் ஒன்று பெரும்பான்மையாக உள்ளது. 2017ம் ஆண்டில் மக்களில் ஏறத்தாழ 36 வீதமானோர் கத்தோலிக்கர்களாகவும் ஏறத்தாழ 24 வீதமானோர் புரொட்டஸ்தாந்து மதத்தவராகவும் இருந்துள்ளனர். இத்துடன் மேலும் பல மதப்பிரிவுகளும் சுவிசில் உள்ளன. வசிக்கும் மக்களில் 5.4 வீதமானோர் முஸ்லிம்கள் 5.9 வீதமானோர் ஒத்தொடொக்ஸ் மற்றும் வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களாகவும் ஏறத்தாழ 1 வீதத்தினர் இந்துக்கள் பௌத்தர்கள் மற்றும் யூத மதத்தினராக உள்ளனர். கடந்த வருடங்களில் பல மக்கள் தமது சமயங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி மதச்சார் பற்றவர்களின் தொகை பெரிதும் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் மதச்சார்பற்றவர்களின் தொகை ஏறத்தாழ 26 வீதமாக இருந்துள்ளது (ஆதாரம்: கணக்கெடுப்புக்கான மத்திய திணைக்களம் நிலை 2017).

undefined