சுவிசில் சமயமும் நாடும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை. மதநம்பிக்கை- தீர்மானித்தல்- மற்றும் கலாச்சாரச் சுதந்திரத்தில் உள்ள உரிமை மத்திய சட்டவாக்கத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும் தான் மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க விரும்புகிறாரா மற்றும் எந்த சமயத்தை அவர் பின்பற்றவோ அல்லது இல்லாமல் இருக்கவோ விரும்புகிறார் என்பதை சொந்தமாக முடிவு செய்வதற்கு உரிமையுள்ளது.
ஒருவர் தமது நம்பிக்கையை அல்லது சமயத்தை மாற்றிக்கொள்ளலாம் மற்றும் தான் பெற்ற அனுபவங்களை வெளிப்படையாகக் கூறலாம். இது தனியொருவருக்கோ அல்லது அதேபோன்று மதக்குழுவினருக்கோ பொருந்தும். ஒவ்வொர்வரும் அவரது மத நம்பிக்கையை தனியாகவோ அல்லது ஒரு கலாச்சாரக் குழு ஊடாகவோ சமய நிகழ்வுகள் அல்லது ஆசாரங்கள் ஊடாகவோ வெளிப்படுத்த உரிமையுண்டு.