அரசியல்

அரசியல் நடைமுறை

சுவிசின் அரசியல் நடைமுறை எவ்வாறு செயற்படுகின்றது?

சுவிஸ் மத்திய சட்டவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது (நாட்டின் அடிப்படைச் சட்டம்) மற்றும் இதன்படி இது ஒரு சட்ட இறைமை கொண்ட நாடு. சுவிஸ் ஒரு நேரடி ஜனநாயகம் கொண்டது ஏனென்றால் ஆண் மற்றும் பெண் பிரஜைகள் பொது விடயங்களில் பெரும்பாலும் சேர்ந்து முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியும். சுவிசின் நேரடி ஜனநா யகம் அனைத்துலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டனதாகும்.

 

அத்துடன் இது சமஸ்டி முறையானது ஏனென்றால் இது மாநிலங்களால் உருவானது இவை பெருமளவில் சொந்தமாக இயங்குவதை நடைமுறையாகக் கொண்டன. இன்று சுவிசில் 26 மாநிலங்கள் உள்ளன அதில் ஆறு அரை மாநிலங்கள் உள்ளன. இவை வித்தியாசமான அளவுகளில் இருப்பதோடு ஒரே வித மொழி ரீதியாகவோ அல்லது சமய ரீதியாகவோ கட்டப்படவில்லைZürich, Bern, Luzern, Uri, Schwyz, Obwalden மற்றும் Nidwalden (அரை மாநிலங்கள்), Glarus, Zug, Freiburg, Solothurn, Basel-Stadt மற்றும் Basel-Landschaft (அரை மாநிலங்கள்;), Schaffhausen, Appenzell Ausserrhoden மற்றும்; Appenzell Innerrhoden (Halbkantone), St. Gallen, Graubünden, Aargau, Thurgau, Tessin, Waadt, Wallis, Neuenburg, Genf மற்றும்; Jura.

 

சுவிசின் ஜனநாயகம் சுவிசின் மத்திய சட்டவாக்கத்தில் தங்கியுள்ளதுடன் ஆட்சியுரிமைப் பிரிவுகளையும் அறிந்துள்ளது. இதன் அர்த்தம் நாட்டின் ஆட்சி வித்தியாசமான ஆட்சி அமைப்புக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதாகும். தேசிய ரீதியில் இது பின்வருமாறு அமைந்துள்ளது:

 

  • சட்டவாக்கம் (சட்டமைப்பு ஆட்சிமுறை) என்பது தேசிய நாடாளு மன்றம். இது மத்திய பிரதிநிதிகள் சந்திப்பு எனவும் அழைக்கப்படும் அத்துடன் இரு சபைகளைக் கொண்டது: தேசிய அவை மற்றும் மாநில அவை. தேசிய அவையில் 200 பிரதி நிதிகள் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். நாடாளு மன்றில் மாநில அவை 46 பிரதிநிதிகளுடன் 26 மாநிலங்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவார்கள்.
  • செயற்படுத்தல் (ஆட்சிமுறையை செயற்படுத்தல்) என்பது மத்திய சபை (மாநில அரசு). இதில் ஏழு உறுப்பினர்கள் இருப்பார்கள் இவர்கள் மத்திய அரசின் நிர்வாகத்திற்கானவர்கள். இந்த மத்திய சபையில் ஒருவர் மேலதிகமாக ஒவ்வொரு முறையும் ஒருவருட காலத்திற்கு நாட்டின் ஜனாதிபதியாகச் செயற்படுவார்.
  • நீதிமுறை (உரிமைகளைக் காக்கும் ஆட்சிமுறை) தேசிய ரீதியாக மத்திய நீதிமன்றம் மத்திய குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாக நீதிமன்றம்.

 

மத்திய அரசை விட (முழுநாட்டிற்கும்) 26 மாநிலங்கள் (நாட்டின் கிளைகள்) சுவிசில் ஆட்சியுரிமைப் பிரிவுகள் உள்ளன. இவைகளது கட்டமைப்பு மாற்றியமைக்கப்படக்கூடியது: மாநிலத்திற்கான ஆட்சிமன்றம் (அனைத்து மாநிலலங்களிலும் இல்லை) மாநில அரசு மற்றும் மாநில நீதிமன்றங்கள் உள்ளன.