சுவிசில் அதிக அரசியல் விடயங்களில் சேர்ந்து கருத்துத் தெரிவிப்பதைப் பொறுத்தவரை பிரஜாவுரிமை தேவைப்படும் அதாவது அவர்கள் ஆண் அல்லது பெண் சுவிஸ் பிரஜைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் சில மாநிலங்கள் ஏற்கனவே நகர- அல்லது மாநில ரீதியாக ஆண் மற்றும் பெண் வெளிநாட்டவர்களுக்கு தேர்தல்- மற்றும் கருத்துக் கூறும் உரிமையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மாநில நகரங்களுக்கு அங்கு வசிக்கும் தமது வெளிநாட்டு மக்களுக்கு இந்த அனுமதியைக் கொடுப்பதா அல்லது கொடுக்காமல் விடுவதா எனத் தீர்மானிப்பதற்கு உரிமை உண்டு.
Neuenburg மற்றும் Jura மாநிலங்களில் இவ்விதமான உரிமை உள்ளுர் மற்றும் மாநில மட்டத்திலும் Freiburg, Genf மற்றும் Waadt ல் உள்ளுர் மட்டத்திலும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலங்கள் Appenzell Ausserrhoden, Basel-Stadt மற்றும் Graubünden நகரங்களில் உள்ளுர் விடயங்களுக்கு வெளிநாட்டவர்களும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. (நிலை தை 2018).
Graubünden மாநிலத்தின் சில உள்ளுராட்சிசபைகளில் வெளிநாட்டவருக்கு வாக்குரிமை உள்ளது. இதுகுறித்து உங்கள் உள்ளுராட்சிசபையில் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
ஆண் மற்றும் பெண் வெளிநாட்டவர்களுக்கு அரசியலில் சேர்ந்து செயற்படுவதற்கு வேறு சந்தர்ப்பங்களும் உள்ளன. நீங்கள் ஆட்சேபனையை வெளிப்படுத்தலாம் அல்லது நீங்கள் அதில் கையொப்பமிடுவதற்கான உரிமை உள்ளது. பெருமளவு சுவிசின் பொதுவான- சட்டரீதியான ஆலயங்களில் வெளிநாட்டவர் வாக்குரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்றும் பல்வேறு இடங்களில் அதாவது அமைப்புகள் மக்கள் நிலையங்கள் மற்றும் கழகங்களில் சேர்ந்து செயற்படலாம். இதன்மூலம் உள்ளுர் மட்டத்தில் உதாரணமாக வசிப்பிட அல்லது நகரத்தில் சேர்ந்து செயலாற்றலாம்.