ஆண் மற்றும் பெண் வெளிநாட்டவர்கள் ஒத்துழைத்து முன்னேறிக்கொள்ள வேண்டும் என்பதில் வெளிநாட்டவர் சட்டம் பெருமளவு அக்கறை காட்டு கின்றது. அதாவது ஒரு வதிவிட அனுமதி வழங்கப்படும்போது மொழியைக் கற்க வேண்டும்- அல்லது ஒத்துழைத்து முன்னேற்றும் பாடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டு உறுதிப்படுத்ப்பட்டிருக்கலாம். இதன்படி ஆண், பெண் குடிவரவாளர்களுடன் ஒத்துழைத்து முன்னேறும் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒரு உறுதியான கடமை ஒப்பந்தத்தை செய்துகொள்வர்.
Graubünden மாநிலத்தில் 2012ம் ஆண்டு ஆரம்பம் தொடக்கம் மூன்றாம் நாடுகளிலிருந்து குடும்ப ஒன்று சேர்தலுக்காக வரும் நபர்களுடன் ஒத்துழைத்து முன்னேற்றும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுகின்றது. இது, ஒரு தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட விடயத்தை மேற்கொள்வது, சொந்தமாக மொழி மற்றும் சமூக ரீதியில் ஒத்துழைத்து முன்னேறுவதைக் காண்பிப்பது, மற்றும் மொழியை கற்பது குறித்து நிட்சயப்படுத்தப்படும்.