மொழியறிவு அத்தாட்சி

மொழியறிவு அத்தாட்சி

மொழியறிவு அத்தாட்சி

வெளிநாட்டவர்- மற்றும் ஒத்துழைத்து முன்னேற்றும் புதிய சட்டத்தின்படி ஒத்துழைத்து முன்னேற்றுவது உள்வாங்கப்பட்டிருப்பதுடன், ஒன்றிணைந்த சுவிஸ் அரசமைப்பிலும் புதிய மக்கள் உரிமைச் சட்டவிதியாக்கத்தில் மிகவும் பெறுமானம் மிக்கதாக உள்ளது. ஒத்துழைத்து முன்னேற்றுவதில் மொழித் திறமையும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இது பல்வேறு வகையில் வெளிநாட்டருக்கான வதிவிட அனுமதி விசாரணைகளுக்கு மற்றும் குடியுரிமை பெறுவதற்கு ஒரு உத்தியோகபூர்வமான மொழிச் சான்றிதழ் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

மொழியறிவு அத்தாட்சி fide

மொழியறிவு அத்தாட்சி fide மூலம் ஒருவர் தனது வாய்மொழி மற்றும் எழுத்து அறிவை தரம் A1 – B1 வரையாக சுவிஸ் மாநில மொழிகளான டொச், பிரெஞ்சு மற்றும் இத்தாலியத்தை உறுதிப்படுத்தலாம்.

 

சுவிசில் அனைத்துப் பிரதேசங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்படுத்தும் நிலையங்கள் உள்ளன, இவை மொழியறிவு அத்தாட்சி fide ஐ வருடத்தில் பலதடவைகள் மேற்கொள்கின்றன.

நான் எவ்வாறு மொழியறிவு அடையாளஅட்டை fide வை பெற்றுக்கொள்ளலாம்?

மொழியறிவு அத்தாட்சி fide வை முடித்தபின்பு நீங்கள் மொழியறிவு அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வீர்கள். அதில் உங்களது வாய்மொழி மற்றும் எழுத்து மூலமான மொழித்திறமை வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

தற்சமயம் நீங்கள் ஏற்கனவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழிச் சான்றிதழை வைத்திருந்தால், நீங்கள் அதை fide அலுவலகத்தில் ஒப்படையுங்கள். ஒரு கட்டணம் செலுத்திய பின்பு உங்களுக்கு மொழியறிவு அடையாளஅட்டை வழங்கப்படும்.

 

ஒருவர் மொழியறிவுத் தராதரம் B1 மற்றும் அதற்கு மேல் வைத்திருந்து அத்துடன் அதை உறுதிப்படுத்த முடிந்தால், அதை அங்கீகரிக்கும் முறைமை ஊடாக ஒரு மொழியறிவு அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்குச் சந்தர்ப்பமுண்டு.

 

இதுகுறித்த மேலதிக விபரங்களை நீங்கள் இணையதளப் பக்கம் fide இல் காணலாம்.