ஒத்துழைத்து முன்னேற்றும் வசதிகள்

ஒத்துழைத்து முன்னேற்றும் வசதிகள்

வேறு எவ்வித மேலதிகமான ஒத்துழைத்து முன்னேற்றம் வதிகள் உள்ளன?

ஒருசில கிரமியசபைகளில் புதிதாக குடியேறியவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் அல்லது தகவல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதற்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் அழைக்கப்படுவீர்கள். இங்கு நிர்வாக பிரதிநிதிகள் உள்ளுராட்சி செயற்பாடு மற்றும் அதன் அலுவலகங்களை அறிமுகம் செய்து வைப்பார்கள். இதன்போது நீங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு மற்றும் புதிய சமுதாயத்தில் வாழ்வது குறித்த முக்கிய தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.

 

Graubünden மாநிலத்தில் இதற்காகப் பல எண்ணிக்கையான மொழி-, உயர்கல்வி- மற்றும் ஒத்துழைத்து முன்னேற்றும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உள்ளுராட்சிசபையில் அல்லது இணையத் தகவல் தளமான www.integration.gr.ch ல் நீங்கள் இவைகளை அறிந்து கொள்ளுங்கள்.