ஒருங்கிணைப்பு என்பது தனிப்பட்ட மற்றும் சமூகத்துக்கான ஒரு சக்திவாய்ந்த செயல்பாடு ஆகும். இது அனைத்து தரப்பு மக்களின் சமூகப் பொருளாதாரத் தேவைகள், உரிமைகள் மற்றும் நோக்கங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவின் அடிப்படையிலானது. ஒருங்கிணைப்பை உருவாக்குவது ’சவால் மற்றும் ஊக்கம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது மற்றும் மொழியைக் கற்பது, தொழில்முறை முன்னேற்றம் மற்றும் சமூகப் பங்கேற்பை இது ஆதரிக்கிறது.
ஒருங்கிணைப்புத் துறை மாகாணம் மற்றும் நகராட்சி அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நிர்வகிக்கிறது. மொழி சார்ந்த மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் திட்டங்களை செயல்படுத்தி ஆதரிப்பதுடன் ஒருங்கிணைப்புக்கான தகவல்களைத் தருவதையும் இந்த துறை மேற்கொள்கிறது.