சுவிசில் குடியேறியிருக்கும், வேறு மொழி பேசும் நபர்களுக்கு மொழியை ஊக்குவித்து முன்னேற்றுவதற்கு, மாநிலங்களின் கூட்டரசு fide எனும் ஒரு மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுவிசின் நாளாந்த வாழ்க்கைக்கு ஏற்றவிதமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் குடியேறியவர்கள் கதைப்பதற்குத் தேவையானவற்றை உள்ளடக்கியுள்ளது. தராதரப் படிமானத்தில் fide மொழி வகுப்புக்களில் கற்பிப்பதற்கான தேவைப்படும் குறிப்பிட்ட தரத்திற்கான இலட்சினையைப் பெற்றுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றிய மொழி வகுப்பு முறையும் உள்ளது, அவை fide கொள்கையின்படியாக அமைந்திருக்கும்.