பாகுபாடு காட்டுதல்

பாகுபாடு காட்டுதல்

பாகுபாடு மற்றும் இனவேறுபாட்டுக்கு எதிராக நான் எவ்வாறு எனது எதிர்ப்பைக் காண்பிக்கலாம்?

சுவிசில், பகிரங்கமாக ஒருவரை அவரின் இனத்திற்காக அல்லது அவரின் இனக்குழுவுக்காக அல்லது அவரின் சமயத்திற்காக ஏளனம் செய்வது அல்லது ஒதுக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது மனித மாண்பை பாதிப்படையச் செய்வதற்குத் தடையுள்ளது. அத்துடன் பொது இடங்களில் வழங்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை மறுப்பதும் தடைசெய் யப்பட்டுள்ளது. பொது இடத்தில் சம்பவம் இடம்பெற்றால், இன ரீதியான ஒதுக்குதல் குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.

 

எவராவது இனரீதியான ஒதுக்குதலுக்கு உள்ளாகிப் பாதிப்படைந்தால், விசேடமாக ஒரு முதல்தொடர்பு- மற்றும் ஆலோசனை நிலையத்தை அணுகி ஆலோசனை பெறவும். இந்த விடயம் குறித்த தகவல்களை சட்ட உதவி விளக்கமான «Rassistische Diskriminierung» என்பதிலும் காணலாம். இது நிறவெறிக்கு எதிராகப் போராடும் துறைசார் நிலையத்தால் வெளியிடப்படுவது என்பதுடன் இதை இணையத்தளத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.