விபத்துக் காப்புறுதி

விபத்துக் காப்புறுதி

விபத்துக் காப்புறுதி

ஒரு விபத்து ஏற்பட்டால் அதற்கான வைத்தியச் செலவை விபத்துக் காப்புறுதி பொறுப்பேற்றுக்கொள்ளும். இதைவிடவும் தொழில் செய்ய முடியாத குறிப்பிட்ட காலத்திற்கு நாள் பணம் (ஊதியத்திற்கு மாற்றீ டாக) நீண்ட காலத்திற்கு தொழில் செய்ய முடியாது போனால் ஓய்வூதியப்பணம் மற்றும் இறப்பு ஏற்படின் இக்காப்புறுதி பணம் செலுத்தும்.

 

சுவிசில் தொழில்புரியும் அனைத்து ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் விபத்திற்கு எதிராக காப்புறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

 

  • நீங்கள் எட்டு மணத்தியாலங்கள் அல்லது அதற்கு மேலாக ஒரு கிழமையில் ஒரு தொழில் வழங்குபவரிடம் வேலை செய்தால்: நீங்கள் தொழில் புரியும் நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொழிலுக்கு அப்பாற்பட்ட விபத்துக்களுக்கு எதிராக (தொழிலுக்கு செல்லும் வழியில் மற்றும் ஓய்வுநேரத்தில் இடம்பெறும் விபத்துக்கள்) காப்புறுதி செய்யப்பட்டுள்ளீர்கள்.
  • நீங்கள் எட்டு மணித்தியாலங்களுக்குக் குறைவாக ஒரு கிழமை யில் ஒரு தொழில் வழங்குபவரிடம் வேலை செய்தால்: நீங்கள் தொழில் புரியும் நேரத்தில் ஏற்படும் விபத்துக்களுக்கு மற்றும் தொழிலுக்கு செல்லும் வழியில் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டும் எதிராகக் காப்புறுதி செய்யப்பட்டுள்ளீர்கள். ஓய்வுநேர விபத்துக்களுக்கு (உதாரணமாக வீட்டு வேலையின்போது) நீங்கள் உங்கள் மருத்துவக் காப்புறுதியில் விபத்துக் காப்புறுதியை மேலதிகமாக செய்துகொள்ள வேண்டும்.
  • தொழில் இழந்த நபர்கள், தொழில் இழந்தமைக்காக பணம்பெறும் உரிமையுள்ளவர்களுக்கு, கட்டாயக் காப்புறுதி செய்யப்பட்டும்.

 

காப்புறுதி செய்யப்படாதவர்கள் --- தொழில் செய்யாத நபர்கள், உதாரண மாக வீட்டிலிருக்கும் பெண்கள் மற்றும்- ஆண்கள், பிள்ளைகள், மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அல்லது தொழில் இழந்த வரிகட்டாதவர்கள் ஆகும். இந்த நபர்கள் தமது மருத்துவக் காப்புறுதியில் கட்டாயமாக விபத்துக்கு எதிராகக் காப்புறுதி செய்து கொள்ளவேண்டும்.

 

ஒரு விபத்து நடந்தால் நீங்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்: உடனடியாக விபத்துக் குறித்து உங்கள் தொழில் வழங்குனருக்கு அல்லது மருத்துவக் காப்புறுதிக்கு அறிவியுங்கள். இதற்கான படிவத்தை தொழில் வழங்குனரிடமோ அல்லது உங்கள் மருத்துவக் காப்புறுதியிடமோ பெற்றுக்கொள்ளலாம்.