சமூகக் காப்புறுதி முறை

சமூகக் காப்புறுதி முறை

சமூகக் காப்புறுதி முறை

சுவிசில் நன்கு விரிவாகத் திட்டமிடப்பட்ட சமூகக் காப்புறுதித் முறை உள்ளது. இது காப்புறுதி செய்யப்பட்டவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்றவாறு- வயதானபோது, தொழில் செய்ய இயலாதபோது அத்துடன் நோய்கள் மற்றும் விபத்து போன்றவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன், காப்புறுதி செய்த நபர் இறக்க நேரிட்டால் உறவினர்களுக்கு நிதி விடயத்தில் பாதுகாப்பு வழங்குகின்றது. வேறு காப்புறுதிகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்களான நோய், விபத்துச் செலவு, தொழில் இழப்பு அதேபோன்று தாய்மைநிலையடைதல் மற்றும் குடும்பத்துக்கான மேலதிக கொடுப்பனவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது.

 

ஒவ்வொரு காப்புறுதிப் பகுதிக்குமான செலவுகள் முதற்படியாக தொழிலால் வரும் வருமானத்திலிருந்து செலுத்தப்படும். அதாவது, இந்தக் கட்டணங்கள் தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து நேரடியாகக் கழித்துக் கொள்ளப்படும். அத்துடன் தொழில் வழங்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், சொந்தமாகத் தொழில் செய்வோர் மற்றும் தொழில் செய்யாதோரும் இதற்கான கட்டணங்களைச் செலுத்துகின்றனர். மருத்துவக்காப்புறுதி சுவிசில் கட்டாயமானது என்பதுடன் கட்டணம் (காப்புறுதிக் கட்டணம்) ஒவ்வொரு காப்புறுதி செய்து கொள்ளும் நபராலும் செலுத்தப்படும். இந்தக் கட்டணம் வருமானத்தின் அளவைப் பொறுத்து இல்லாதபடியால், குறைவான ஊதியம் பெறும் நபர்களுக்கு மாநிலம் உதவித்தொகை வழங்கும் (=தனிப்பட்டவர்களுக்கான கட்டுப்பண மானியம்).

 

இதைவிடவும் சமூகக் காப்புறுதிளைச் செலுத்துவதில் மத்திய மற்றும் மாநிலம் அரசு வித்தியாசமான அளவுகளில் பங்கெடுத்துக் கொள்கின்றன (விதிவிலக்காக விபத்துக் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய முற்பாதுகாப்பு).

 

வயதானவர்களுக்கான சமூகக் காப்புறுதித் திட்டம் சுவிசில் ஒரு முக்கியமான சமூகக்காப்புறுதி என்பதுடன் இது மூன்று-தூண்கள்-கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

 

  • வயதானோர்-மற்றும் விட்டுச் சென்றவர்களுக்கான காப்புறுதி(AHV)
  • தொழில் முற்பாதுகாப்பு (ஓய்வூதியப் பணம்)
  • சொந்தவிருப்பிலான வயோதிப முற்பாதுகாப்பு (3வது தூண்)