சமூக ஆலோசனை மற்றும் சமூக உதவி

சமூக ஆலோசனை மற்றும் சமூக உதவி

சமூக ஆலோசனை மற்றும் சமூக உதவி

பொருளாதாரம் மற்றும் சமுதாய உதவி மற்றும் தனிநபர் மற்றும் குடும்பக் கலந்தாய்வில் க்ராவ்புண்டன் (Graubünden) சமூகப் பாதுகாப்பு அலுவலகம் முக்கியப் பொறுப்பு வகிக்கிறது.

 

தனிநபர் சமூகக் கலந்தாய்வு

தனிநபர் கலந்தாய்வுக்கு வட்டார சமூகச் சேவைகள் மையத்தின் பணியாளர்கள் பொறுப்பேற்கின்றனர். வட்டார சமூகச் சேவைகளுடன் கூடுதலாக குழந்தைப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டோர் உதவி மற்றும் போதைக்கு அடிமையாதல் பிரச்னைகளுக்கு சிறப்பு சமூகச் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. வட்டார மற்றும் சிறப்பு சமூகச் சேவைகள் பற்றிய தகவல்களை ’’முகவரிகள் மற்றும் தொடர்புகள்’’ அத்தியாயத்தில் காணலாம்.

 

பொருளாதார சமூக உதவி

ஒவ்வொரு ஆணும்/பெண்ணும் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தாங்களாகவே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு அடிப்படைக் கொள்கை ஆகும். தற்காலிகமான அல்லது நீண்ட பொருளாதாரச் சிக்கல்கள் உள்ள, தங்கள் பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துகொள்ள முடியாத நபர்கள் சமூக நன்மைகளைக் கோரலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபர் க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் வசிப்பவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

 

செல்லுபடியாகாத ஓய்வூதியம் மற்றும் நிதியுதவி வழங்கமுடியாத குடும்பம் அல்லது தனிநபர் போன்றவற்றுக்கு சட்டப்படியான நன்மைகளைக் கோர உரிமையில்லாத நபராக இருந்தால் மட்டுமே அவருக்கு சமுதாய நன்மைகள் வழங்கப்படும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமுதாய நன்மைகள் தனித்தனியாக கணக்கிடப்படும் மற்றும் அவை தனிப்பட்ட சூழ்நிலைகள், வாழ்க்கைச் செலவுகள், வருமான நிலைகள் மற்றும் உதவியின் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.

 

மாகாண ஒதுக்கீடுகள் மற்றும் நகராட்சிகளின் பரிந்துரைகளுக்கும் சமுதாய நன்மைகள் குறித்த ஸ்விஸ் மாநாட்டின் வழிகாட்டுதல்களுக்கும் இணங்க இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது. க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில், வழங்கப்பட வேண்டிய சமுதாய நன்மைகள் குறித்து நகராட்சிகள் முடிவு செய்கின்றன.

தொடர்பு

  • Kantonales Sozialamt Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden மாகாண சமூகப் பாதுகாப்பு அலுவலகம்Gürtelstrasse 897001 Chur081 257 26 54www.soa.gr.ch