தனிப்பட்ட முற்பாதுகாப்பு

தனிப்பட்ட முற்பாதுகாப்பு

எனக்குத் தனிப்பட்ட முற்பாதுகாப்பாக (3வது தூண்) எவ்வித சந்தர்ப்பங்கள் உள்ளன?

AHV மற்றும் இரண்டாவது தூணுக்குப் பக்கமாக தனிப்பட்ட முற்பாதுகாப்பு உள்ளது, இது மூன்றாவது தூண். மூன்றாவது தூணில் (சரியாக: தூண் 3a) சொந்த விருப்பில் ஓய்வுபெற்ற பின்னரான காலத்திற்காகப் பணத்தைச் சேமித்துக் கொள்ளலாம். இந்த சேமிப்பிற்கு ஆதரவாக, இந்தநாடு வரிச்சலுகையை வழங்கி ஊக்குவிக்குகின்றது, இருப்பினும் இது ஒரு எல்லைக்கு உட்பட்டதாகும்:

 

நியமனம் பெற்ற ஊழியர்கள், ஏற்கனவே AHV மற்றும் ஓய்வூதிய நிதியத்திற்கு கட்டணம் செலுத்துபவர்கள், மேலதிகமாக ஒரு வருடத்திற்கு 7000 பிராங்குகள் அளவில் (ஒவ்வொரு வருடமும் தீர்மானிக்கப்படும்) மூன்றாவது தூணுக்குப் பணம் செலுத்தலாம் என்பதுடன் இந்தப் பணத்தை வருமான வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். சொந்தமாகத் தொழில் செய்வோர் அவர்களது வருமானத்தில் 20 வீதத்தை இந்த மூன்றாவது தூணுக்கு செலுத்தலாம் என்பதுடன் அந்தத் தொகையை வருமானவரியில் கழித்துக் கொள்ள முடியும். (இதிலும் தொகையின் உயர்வுக்கு ஒரு எல்லையுண்டு). ஆகவே இந்த மூன்றாவது தூண் சொந்தமாகத் தொழில் செய்வோருக்கான வயோதிப முற்பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய திட்டமாகும்.