சுவிஸ் மருத்துவக் காப்புறுதி முறையில், இரு செலவைப் பொறுப்பேற்கும்- அல்லது மீளப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. சேவையைச் செய்வோருக்கு, உதாரணமாக குடும்ப வைத்தியர் அல்லது உடற்பயிற்சி சிகிச்சை வழங்குபவர்களுக்கு, அவர்கள் சேவைக்காக இரு வழிகளில் அதற்கான கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளலாம்:
- காப்புறுதி செய்யப்பட்டவரால், அவர் மீளவும் ஏற்பட்ட
செலவை தமது காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். (Tiers garant முறை)
- காப்புறுதி செய்யப்பட்டவரால், அவர் சேவை
செய்பவர்களுடன் தீர்மானிக்கப்பட்டிருந்தால், அவர்களது சேவைக்காக நேரடியாக கட்டணத்தைப் பெற்றுக்கொள்வார்கள் (Tiers payant முறை)
நீங்கள் உங்கள் மருத்துவக் காப்புறுதியுடன் வேறுவிதமாகத் தீர்மானித்திருக்காது விட்டால், Tiers garant முறையை அமுல்படுத்துவர். அதாவது, நீங்கள் ஒரு வைத்தியரிடம் சென்றபின் அதற்கான கட்ட ணப்பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்வீர்கள். அதை நீங்கள் சொந்தமாக ச் செலுத்த வேண்டும். இந்தப் பற்றுச்சீட்டுடன் நீங்கள் அதன் ஒரு பிரதியையும் பெற்றுக்கொள்வீர்கள் (= திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பிரதி அல்லது செலவுப் பற்றுச்சீட்டு). இந்தப் பிரதியை நீங்கள் மருத்துவக் காப்புறுதிக்கு அனுப்ப வேண்டும். இந்தக் கட்டணம், நீங்கள் சொந்தமாகச் செலுத்த வேண்டிய கட்டணத்திற்கு மேலாக உயர்ந்து சென்றால் -அதில் 90 வீதத்தை நீங்கள் வழங்கியுள்ள வங்கிக் கணக்கிற்கு அல்லது தபாலக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பர்.
குறிப்பு: நிதி நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கு கட்டணப் பற்றுச்சீட்டுக் கிடைத்த உடனேயே அதை மருத்துவக் காப்புறுதிக்கு அனுப்பி வையுங்கள். அதிக வேளைகளில் வைத்தியர் தமது பணத்தைப் பெறுவதற்குரிய கால எல்லை முடிவடைய முன்னரே நீங்கள் மருத்துவக் காப்புறுதியிலிருந்து அப்பணத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்:
வைத்தியசாலைச் செலவுகள் ஒன்றில் உங்கள் வீட்டிற்கு அல்லது மருத்துவக் காப்புறுதிக்கு அனுப்பிவைக்கப்படும். அதிக வேளைகளில் இப் பற்றுச்சீட்டுக்கு நேரடியாக மருத்துவக் காப்புறுதி பணம் செலுத்தும். நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய வேறு செலவுகளை (சொந்தமாகச் செலுத்த வேண்டியது, பராமரிப்புத் தொகை), போன்றவற்றிற்கு மருத்துவப் காப்புறுதி அல்லது வைத்தியசாலை புறம்பான கட்டணப் பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கும்.