மருத்துவக் காப்புறுதி

செலவில் பங்களிப்பது

எதை நான் சொந்தமாகச் செலுத்த வேண்டும், மருத்துவக் காப்புறுதி எவற்றைச் செலுத்தும்?

கட்டணத்துக்கு மேலதிகமாக நீங்கள் சிகிச்சைச் செலவின் ஒரு பகுதியை சொந்தமாக செலுத்த வேண்டும். இந்தப் பங்களிப்பை Franchise (சொந்தமாகச் செலுத்தும் பணம்) என அழைப்பர். சொந்தமாகச் செலுத்தும் பணத்தின் அளவை நீங்களாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆகக் குறைந்த சொந்தமாகச் செலுத்தும் பணம் 300 பிராங், கூடியது 2500 பிராங். அதாவது: ஆகக்கூடிய சொந்தமாகச் செலுத்தும் பணம் 2500 பிராங் வரை அனைத்து வைத்தியரின் செலவுகளையும் சொந்தமாகச் செலுத்த வேண்டும். ஆகவே இந்த முறையில் காப்புறுதிக் கட்டணம் குறைவாக இருக்கும். சொந்தமாகச் செலுத்தும் பணம் குறைவாக இருப்பின் (உதாரணமாக 300 பிராங்) மாதாந்தக் காப்புறுதிக் கட்டணம் உயர்வாக இருக்கும். இதன்படி வைத்தியச் செலவு 300 பிராங் கிற்கு உயர்வுற்றால் அதை காப்புறுதி பொறுப்பேற்றுக் கொள்ளும். உயர்வான சொந்தமாகக் கட்டும் பணம் (காப்புறுதிக் கட்டணம் குறை வானதாக) இருப்பது பிரயோசனமாக இருக்கும் எப்போதென்றால், உங்களுக்கு மிகக் குறைவாக நோய் ஏற்படின் என்பதாகும்.

 

வைத்தியருக்கான வருடாந்தச் செலவு நீங்கள் சொந்தமாகச் செலுத்தும் பணத்திற்கு உயர்வாகச் சென்றால் நீங்கள் மேலதிகமாக செலவில் 10 வீதத்தை செலுத்த வேண்டும், இதை சொந்தப் பொறுப்பு என அழைப்பர். சொந்தப் பொறுப்புக் கட்டணம் சட்டப்படி வருடத்திற்கு ஆகக்கூடியது 700 பிராங் ஆகும். (நிலை தை 2019).

 

கர்ப்பமுற்றுள்ள காலம் மற்றும் மகப்பேற்று செலவுகள் அனைத்தையும் ஆரம்பம் முதல் கொண்டே மருத்துவக் காப்புறுதி பொறுப்பேற்கும்.