நியமனம் பெற்ற தொழிலாளர்கள் அனைவரும் பிள்ளைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குடும்ப உதவித் தொகையைப் பெறுவர். Graubünden மாநிலத்தில் பின்வரும் உதவித் தொகை வழங்கப்படுகின்றது (நிலை தை 2021):
- 220 பிராங் மாதமொன்றிற்கு ஒரு பிள்ளைக்கு
- 270 பிராங் மாதமொன்றிற்கு 16 தொடக்கம் 25 வயதான
தொழிற்கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு (தொழிற்கல்வி
உதவித் தொகை என அழைக்கப்படுவது)
குடும்ப உதவித்தொகை பெற்றோரில் எவர் அதிக ஊதியத்தை பெறுகின்றாரோ அவருக்கு வழங்கப்படும்.
அனைத்து மாநிலங்களிலும், தொழில் செய்யாது இருப்போருக்கும் குடும்ப உதவித்தொகையைப் பெறுவதற்கு உரித்துள்ளது. Graubünden மாநிலத்தில் வரிகட்ட வேண்டிய ஊதியம் வருடத்திற்கு 43.020 பிராங்குகளுக்கு (நிலை தை 2021) உயர்வாக இருக்கக் கூடாது. இதன்படி சிறிய வேலைகள் செய்பவர்கள் அல்லது உதாரணமாக சிறிய வருமானம் பெறும் உயர்கல்வி கற்பவர்களை இது குறிப்பிடுகின்றது.
சொந்தமாகத் தொழில் செய்யும் நபர்கள், சமப்படுத்தும் நிதியத்தில் பதிவுசெய்திருந்தால் மற்றும் வருடத்திற்கு குறைந்த வருமானமாக 7.170 பிராங்குகள் (நிலை தை 2021) பெறுவாராக இருந்தால், அவர்களுக்கும் குடும்ப உதவித்தொகையைப் பெறுவதற்கு உரித்துள்ளது.
நியமனம் பெற்ற தொழிலாளர்களுக்கு வழமையாக தொழில் வழங்குனரினால் ஊதியத்துடன் சேர்த்து இது வழங்கப்படும். தொழில் செய்யாதோர் மற்றும் சொந்தமாகத் தொழில் புரிவோர் இந்த குடும்ப உதவித் தொகையை Graubünden மாநிலத்தின் சமூகக் காப்புறுதித் திணைக்களத்தில் பெற்றுக்கொள்வார்கள்.