தொழில் இழந்தவர்களுக்கான காப்புறுதி

தொழில் இழந்தவர்களுக்கான காப்புறுதி

தொழில் இழந்தவர்களுக்கான காப்புறுதி (ALV) எவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது?

சுவிசில் எவர் சொந்தமாகத் தொழில் செய்யாது உள்ளாரோ, அதாவது ஊதியம் பெறுகின்றாரோ, அவர் தொழில் இழப்பிற்கு எதிராக காப்புறுதி செய்யப்பட்டுள்ளார். காப்புறுதிக் கட்டணம் நேரடியாக ஊதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படுவதுடன் ஊதியப் பத்திரத்தில் அதைக் கண்டுகொள்ள முடியும். காப்புறுதி செய்யப்பட்ட நபர்கள் தொழில் இழப்பு, குறுகிய நேர வேலை, தொழில் விபத்து, கூடாத காலநிலை மற்றும் தொழில் வழங்குனர் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தொழிலிழந்தவர்களுக்கான காப்புறுதி அதைப் பொறுப்பேற்கும். வழமையாக ALV - செலுத்தும் கடமையுள்ளவர்கள் அதன் 70 வீதமானதை தொழிலிழந்தவர்களுக்கான கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பின், 4000 பிராங்குகளுக்குக் குறைவாகப் பெற்றால் அல்லது தொழில் செய்ய முடியாதவராக இருந்தால் அது 80 வீதமாக வழங்கப்படும். சொந்தமாகத் தொழில் செய்வோர் ALV ல் காப்புறுதி செய்யமுடியாது.

 

தொழிலிழந்தவர்களுக்கான பணத்தைப் பெறுவதற்கு, நீங்கள் கட்டாயமாக முதலில் பிரதேசத் தொழில் அறியத்தரும் நடுநிலை யத்தில் (RAV) விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படப் போகின்றீர்கள் என அறிந்த உடனேயே இதை நீங்கள் செய்ய வேண்டும், அதாவது நீங்கள் தொழில் இழப்பதற்கு முன்பாக. தற்சமயம் நீங்கள் தொழில் இழந்தவருக்கான நிதியத்தில் உறுப்பினராக இல்லாவிடின், அங்கு நீங்கள் அதைச் செய்துகொள்ளலாம்.