AHV எனும் சுருக்கப் பெயர் வயதானோர்-மற்றும் விட்டுச் சென்றவர்களுக்கான காப்புறுதி எனப் பொருள்படும். இது 1948ல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சுவிசில் ஒரு முக்கிய சமூகக் காப்புறுதியாகும்.
வயோதிபருக்கான ஒய்வூதியத்துடன் AHV, காப்புறுதி செய்தவர்களுக்கு ஓய்வுபெற்ற பின்பு (தொழில் வாழ்விலிருந்து வெளியேறிய பின்பு) நிதிப் பாதுகாப்புள்ள ஓய்வுக் காலத்தை உறுதி செய்கின்றது. சுவிசில் ஓய்வுபெறும் வயது பெண்களுக்கு 64 இலும் ஆண்களுக்கு 65 இலும் ஆரம்பிக்கின்றது (தை 2016 நிலை). AHV வின் விட்டுச்சென்றவர்களுக்கான ஓய்வூதியம், காப்புறுதி செய்திருந்தவர் இறந்தால் அவரின் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கு அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு நிதிப் பிரச்சினை ஏற்படாது பாதுகாக்கும்.
AHV வின் அடிப்படை எண்ணம் ஒருவர் மற்றவருக்கு உதவும் கொள்கையைக் கொண்டது. சுறுசுறுப்பாகத் தொழில் செய்யும் மக்கள் தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு நம்பிக்கையுடன் நிதி வழங்க, பின்பு வரும் தலைமுறை இவ்வாறே செய்துகொள்ளும். இந்தக் காப்புறுதி சுவிசில் வசிக்கும் அனைத்து 18. வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயமானது. AHV மத்திய மற்றும் மாநில அரச தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் கட்டணத்திலிருந்து, தொழில் வழங்குனர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து, இதைச் செலுத்திக் கொள்ளும்.
எவராவது ஓய்வூதியம் எடுப்பதற்கு அண்மித்திருந்தால், அவர் ஓய்வூதிய வயது வருவதற்கு மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கு முன்பாக இதற்குப் பொறுப்பான ஓய்வூதிய நிதியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் கேள்விகள் இருந்தால் ஓய்வூதிய நிதியத்தின் உள்ளுராட்சி சபையின் கிளை அலுவலகம் மேலதிக உதவிகளை வழங்கும்.