வயோதிப- மற்றும் விட்டுச்செல்பவர்களுக்கான-காப்புறுதி

வயோதிப- மற்றும் விட்டுச்செல்பவர்களுக்கான-காப்புறுதி

வயோதிப- மற்றும் விட்டுச்செல்பவர்களுக்கான-காப்புறுதி (AHV) எவ்வாறு செயற்படுகின்றது?

AHV எனும் சுருக்கப் பெயர் வயதானோர்-மற்றும் விட்டுச் சென்றவர்களுக்கான காப்புறுதி எனப் பொருள்படும். இது 1948ல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சுவிசில் ஒரு முக்கிய சமூகக் காப்புறுதியாகும்.

 

வயோதிபருக்கான ஒய்வூதியத்துடன் AHV, காப்புறுதி செய்தவர்களுக்கு ஓய்வுபெற்ற பின்பு (தொழில் வாழ்விலிருந்து வெளியேறிய பின்பு) நிதிப் பாதுகாப்புள்ள ஓய்வுக் காலத்தை உறுதி செய்கின்றது. சுவிசில் ஓய்வுபெறும் வயது பெண்களுக்கு 64 இலும் ஆண்களுக்கு 65 இலும் ஆரம்பிக்கின்றது (தை 2016 நிலை). AHV வின் விட்டுச்சென்றவர்களுக்கான ஓய்வூதியம், காப்புறுதி செய்திருந்தவர் இறந்தால் அவரின் துணைவர் மற்றும் பிள்ளைகளுக்கு அல்லது அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு நிதிப் பிரச்சினை ஏற்படாது பாதுகாக்கும்.

 

AHV வின் அடிப்படை எண்ணம் ஒருவர் மற்றவருக்கு உதவும் கொள்கையைக் கொண்டது. சுறுசுறுப்பாகத் தொழில் செய்யும் மக்கள் தற்போது ஓய்வூதியம் பெறுவோருக்கு நம்பிக்கையுடன் நிதி வழங்க, பின்பு வரும் தலைமுறை இவ்வாறே செய்துகொள்ளும். இந்தக் காப்புறுதி சுவிசில் வசிக்கும் அனைத்து 18. வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயமானது. AHV மத்திய மற்றும் மாநில அரச தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் கட்டணத்திலிருந்து, தொழில் வழங்குனர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து, இதைச் செலுத்திக் கொள்ளும்.

 

எவராவது ஓய்வூதியம் எடுப்பதற்கு அண்மித்திருந்தால், அவர் ஓய்வூதிய வயது வருவதற்கு மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கு முன்பாக இதற்குப் பொறுப்பான ஓய்வூதிய நிதியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் கேள்விகள் இருந்தால் ஓய்வூதிய நிதியத்தின் உள்ளுராட்சி சபையின் கிளை அலுவலகம் மேலதிக உதவிகளை வழங்கும்.

தொடர்பு

  • Sozialversicherungsanstalt des Kantons Graubünden

    க்ராவ்புண்டன் Graubünden மாகாணத்தின் சமூகக் காப்பீட்டு நிறுவனம்Ottostrasse 247000 Chur081 257 41 11www.sva.gr.ch

AHV/IV ன் மேலதிகக் கொடுப்பனவுகள்

வயோதிப- மற்றும் விட்டுச்சென்றவர்களுக்கான-காப்புறுதி (AHV) மற்றும் தொழில் செய்ய முடியாதவர்களுக்கான காப்புறுதி (IV) ஆகிய இரண்டிற்கும் EL (மேலதிகக் கொடுப்பனவு) வழங்கி உதவும், அது எப்போதென்றால், ஓய்வூதியம் காப்புறுதி செய்த நபரின் வேறு வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் போன்றவை ஆகக் குறைந்த வாழ்க்கைச் செலவுக்குப் போதாமல் இருந்தால் ஆகும். EL ஐ மாநிலத்தில் வசிக்கும் வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்களும் பெற்றுக்கொள்ள முடியும்:

 

  • EU மற்றும் EFTA (நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் லிக்ஸ்ரென்ஸ்ரைன்) உறுப்பு நாடுகளின் பிரஜைகளுக்கு எவ்வித கால எல்லையும் கிடையாது
  • மூன்றாவது நாடுகளிலிருந்து வந்த பிரஜைகள் 10 வருடங்களாக சுவிசில் இடைவிடாது வாழ்ந்திருந்தால்
  • அகதிகள் மற்றும் நாடற்றோர் 5 வருடங்களாக இடைவிடாது சுவிசில் வாழ்ந்திருக்க வேண்டும்.