சேர்ந்து வாழ்தல்

சேர்ந்து வாழ்தல்

சேர்ந்து வாழ்தல்

சுவிசில் ஒன்றுசேர்ந்து வாழ்வதில் பல வித்தியாசமான விதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பல ஜோடிகள் திருமணமாகாமல் ஒன்று சேர்ந்து வாழ் கின்றனர் (கொங்குபினாற் எனப்படும் கூட்டு ஒப்பந்தம்) அத்துடன் அவர்க ளுக்குப் பிள்ளைகளும் உள்ளனர். இவ்வாறான ஜோடிகள் தமக்குள் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் வசதியுள்ளது. இதில் உதாரணமாக, எவருக்கு எவை சொந்தமானது அல்லது வீட்டுச்செலவை எவ்வாறு பகிர்ந்து கொள்வது போன்றவை ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். தம்பதிகளில் ஒருவர் தனது முன்னைய தாரத்திலிருந்து பிள்ளைகளை தற்போதைய குடும்பத்திற் குக் கொண்டுவருவாராக இருந்தால் அதை Patchwork குடும்பம் என அழைப் பர். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அவர்கள் எவ்வித பங்கை வகின்ற னர்- மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது சுதந்திரமா னது.

 

தொடர்புபடுத்தல்கள்

ஒரே பாலினத் தாம்பத்தியம்

ஒரே பாலினமான ஜோடிகள் சுவிசில் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அவர்கள் தாம் சேர்ந்து வாழ்வதை பதிவுசெய்து கொள்வதற்கும் வசதியுள்ளது. இதன் மூலம் ஜோடிகள் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பெற்றுக்கொள்கின்ற னர். ch.ch எனும் இணையத்தளத்தில் ஒரே பாலின ஜோடிகள் தமது தாம் பத்தியத்தைப் பதிவு செய்துகொள்வதால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் நிதி விடயங்களிலான முக்கிய விளைவுகளை நீங்கள் கண்டறிந்து கொள்ளலாம். உங்கள் உள்ஊராட்சிசபையில் இதற்குப் பொறுப்பான சிவில் பதிவுத் திணைக்களத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய முன்நிபந்தனைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

தொடர்புபடுத்தல்கள்