கருத்துவேறுபாடு

கருத்துவேறுபாடு

சேர்ந்து வாழ்பவர்களின் கருத்துவேறுபாடு

சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையில் வித்தியாசமான காரணங்களால் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் வரக்கூடும், உதாரணமாக வித்தியாசமான விருப்பங்கள் அல்லது குறிக்கோள்கள்- மற்றும் ஒருவர் மற்றவரின் பெறுமதியை மதிப்பிடுவது போன்றவைகளில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். இவ்வாறான வேளைகளில் பிரச்சினைகளை எவ்விதம் அணுகுகின்றார்கள் என்பது மனிதருக்கு மனிதர் மற்றும் ஜோடிகளுக்கு ஜோடி வித்தியாசப்படுகின்றது. இப்படியான பிரச்சினை வேளைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விசேட ஆலோசனை நிலையங்கள் உள்ளன.