திருமணம்

திருமணம்

திருமணம்

சுவிசில் திருமணம் செய்வதற்கு கட்டாயமாக 18 வயதாக இருத்தல் வேண் டும். ஒரு குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் செய்துகொள்ளப்பட்ட திருமணத்தால் மட்டுமே தம்பதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவர். ch.ch எனும் இணையத் தளத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொள்வதால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் நிதி விடயங்களிலான முக்கிய விளைவுகளை நீங்கள் கண்டறிந்து கொள்ளலாம். நீங்கள் வாழுமிடத்திலுள்ள இதற்குப் பொறுப்பான குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய முன்நிபந்தனைகள் மற் றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

உரிமைகள் மற்றும் கடமைகள்

சுவிசில் தம்பதிகள் (பெண் /ஆண்) சம உரிமையுடையவர்கள் என்பதுடன் சட்ட ரீதியாக ஒரேவிதமான உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டுள்ளனர். தமது ஆண் அல்லது பெண் துணையை தாமாகவே தெரிவுசெய்து கொள்ளும் உரிமை உள்ளது. குடும்பத்திற்கோ அல்லது வேறு நபர்களுக்கோ, ஆண்கள் மற்றும் பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு திருமணத்திற்குக் கட்டாயப்படுத்துவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. எவராவது தாம் கட்டாயப்படுத்தப்படுவதாக உணர்வாராக இருந்தால், இதற்கான ஒரு விசேட துறைசார்- மற்றும் ஆலோசனை நிலையத்தை நாடவும்.

 

(Zwangsheirat.ch) எனும் அமைப்பு கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப் பட்ட அல்லது பயமுறுத்தப்படும் பெண்கள், ஆண்கள் மற்றும் இளையோர்களுக்கு இலவசமாக ஆலோசனை, அழைத்துச் செல்லல் மற்றும் உதவிகளை வழங்குகின்றது. கலந்துரையாடல்கள் மற்றும் தகவல்கள் மிக இரகசிய மாகப் பாதுகாக்கப்படும். உதவி பெறுவதற்கான தொலைபேசி இலக்கம் 0800 800 007.