பெற்றோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்

பெற்றோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்

பெற்றோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள்

சுவிசில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும், பிறக்கும் இடத்தில் உள்ள குடிமக்கள் பதிவு அலுவலகத்தில் கட்டாயமாகப் பதியப்பட வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு வைத்தியசாலையில் பிறக்குமாக இருந்தால், வழமையாக வைத்திய சாலை நிர்வாகம் அப் பிறப்பைப் பதிவுசெய்யும். பிறப்பு வைத்தியசாலையில் இடம்பெறாவிட்டால், தாயோ அல்லது சட்டரீதியான தந்தையோ (அதாவது தாயுடன் திருமணமான ஆணோ அல்லது தனது பிள்ளையாக ஏற்றுக்கொண் டவரோ அல்லது ஏற்றுக்கொள்ளவிருப்பவரோ) அல்லது பெற்றோரால் சட்ட ரீதியாக உத்தரவு வழங்கப்பட்ட ஒரு நபரோ பிறப்பை மூன்று நாட்களுக்கு உள்ளாகப் பதிவுசெய்தல் வேண்டும். இப் பதிவிற்கு எவ்வித சான்றிதழ்கள் தேவை என்பதை இதற்குப் பொறுப்பான குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

 

தந்தை மூலமாக பிள்ளையை ஏற்றுக்கொள்ளுதல்

திருமணமான தம்பதிகளைப் பொறுத்தவரை வழமைபோலவே கணவன் பிள்ளையின் தந்தையாக குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் பதிவு செய்யப் படுவார். தற்சமயம் தந்தை- தானே தந்தை என்பதில் சந்தேகம் தெரிவித்தால், அவர் தந்தை நிலையை பரிசோதிக்குமாறு நீதிமன்றைக் கோரலாம்.

 

குழந்தை பிறக்கும் வேளையில் தாய் திருமணமாகதிருந்தால், சொந்தத் தந்தை பிள்ளைக்கு தாமே தந்தை என வெளிப்படுத்தி ஏற்றுக்கொள்ளலாம். இதை பிறப்பிற்கு முன்போ அல்லது பின்போ இதற்குப் பொறுப்பான குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் செய்து கொள்ளலாம். தந்தை தனது பிள்ளையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், தாயார் அதை நீதிமன்றம் ஊடாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரலாம்.

 

தற்சமயம் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளுதல், பிரஜாவுரிமை மற்றும் பிள்ளையின் பெயர் குறித்து கேள்விகள் இருப்பின் குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தை நாடவும்.