பிள்ளையின் நலனை நன்கு கவனித்துக்கொள்வது பெற்றோரின் உரிமை மற்றும் கடமையாகும். இதில் உதாரணமாக பிள்ளையைப் பராமரிப்பது மற் றும் வளர்ப்பது அதேபோன்று அவர்களது கல்வி மற்றும் 18 வயது வரைக்கும் சட்டரீதியான பிரதிநிதிகளாக இருப்பது, அதாவது அவர்கள் முழுவயதை அடையும்வரை பொறுப்பு வகிப்பது என்பவை அடங்கும். மேலும் பிள்ளை தங்கியிருக்கும் இடத்தைத் தீர்மானித்தல் மற்றும் பிள்ளையின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையும் இருக்கும்.
திருமணமாகிய பெற்றோரைப் பொறுத்தவரை, வழமையாக சிறுவயதுப் பிள்ளைகளுக்கு தாய் தந்தை ஒன்றுசேர்ந்த பெற்றோர் கவனிப்பு இருக்கும். அத்துடன் ஒருவரோடு ஒருவர் திருமணமாகாத பெற்றோர்களும் கவனிப்பு உரிமையை ஒன்றுசேர்ந்து மேற் கொள்ள முடியும். இதற்காக இவர்கள் ஒன்றுசேர்ந்து பிள்ளையை ஏற்றுக் கொள்வது குறித்து இதற்குப் பொறுப்பான குடிமக்கள் பதிவுத் திணைக்களத்தில் அல்லது பின்பு பிள்ளைகள்- மற்றும் வயதானோர் பாதுகாப்புத் திணைக்களத்தில்;. (KESB) ஒரு விளக்கத்தைக் கொடுக்கலாம்.