சுவிசில் ஏறத்தாழ ஒவ்வொரு மூன்றாவது திருமணமும் இரு நாட்டைச் சேர்ந்தவர்களோடு சம்பந்தப்பட்டுள்ளது, அதாவது திருமணத் தம்பதிகள் வித்தியாசமான நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இரு நாட்டைச் சேர்ந்த தம்பதிகளுக்கும் பல வேளைகளில் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் எதிர் நோக்கும் கேள்விகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. இதைவிடவும் மேலதி கமாக ஒன்றுசேர்ந்து வாழ்வதில் சட்டரீதியான, சமூக, கலாச்சார மற்றும் நிதி விடயங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றது, உதாரணமாக குடிவரவு அனு பவம், பல கலாச்சாரங்களோடு சேர்ந்து வாழுதல் அல்லது சட்ட ரீதியான நிபந்தனைகள் உள்ளன. இரு நாட்டைச் சேர்ந்த தம்பதிகளாகச் சேருவோர் எதிர்நோக்கும் கேள்விகளுக்கான பதில்களை
binational.ch எனும் இணையத்தளம் வழங்குகின்றது. இந்தத் தகவல்கள் டொச், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.