நீங்கள் புதிதாக Graubünden மாநிலத்தில் வதிவிடத்தைத் தேடியுள்ளதுடன் Graubünden ல் மற்றும் சுவிசில் வாழ்வது குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா?
தெளிவாக அறிந்து கொள்ள உதவியாக நீங்கள் இங்கே நாளாந்த விடயங்கள் குறித்த முக்கிய தகவல்களை காணலாம். அவை உங்களுக்கு Graubünden ல் வாழ்வதை இலகுவாக்கும்.. மேலதிக பிரயோசனமான தகவல்களை மாநிலத்தின் வரவேற்புக் கைநூலில் நீங்கள் காணலாம். இது 19 மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் புதிய வாழ்விடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள், அங்கு பேசப்படும் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்,அத்துடன் அயலவர்கள்,கிராமத்தில் வாழ்பவர்கள் அதேபோன்று உங்கள் வேலை இடத்தில் அல்லது கழகங்களுடன் தொடர்புகளைப் ஏற்படுத்துங்கள். சமூக ரீதியாக மற்றும் சமூக வாழ்வில் உங்கள் பங்களிப்பு விரும்பத்தக்கது!
ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையம் இந்த விடயம் குறித்த உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க விருப்புடன் உள்ளதுடன், Graubünden ல் ஒரு சிறப்புமிக்க ஆரம்பமாக அமைய வாழ்த்துகின்றது..