Graubünden ஒரு பார்வையில்

Graubünden ஒரு பார்வையில்

Graubünden ஒரு பார்வையில்

க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் 198,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 37,000 பேர் வெளிநாட்டவர். 7,106 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட க்ராவ்புண்டன் (Graubünden), சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய மாகாணமாக விளங்குகிறது. சுவிட்சர்லாந்தின் மொத்த பரப்பில் இது 1/6 பங்காகும். மாகாணத்தின் பிரதான நகரமாக விளங்கும் சுர், சுவிட்சர்லாந்தின் பழமையான குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு சுமார் 35,400 பேர் வசிக்கின்றனர்.

 

இந்த மாநிலம் 11 பிரதேசங்களாகவும் 108 உள்ளுராட்சி மன்றங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.. 50 வீதமான உள்ளுராட்சி மன்றங்களில் 1000 க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். (கணிப்பீடு தை 2018)

 

க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தின் பன்மொழி கலாசாரம்

க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் 3 ஆட்சி மொழிகள் உள்ளன: ஜெர்மன், ரோமானிய மொழி மற்றும் இத்தாலியன்.

 

ஜெர்மன்

மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் உள்ளூர் மொழியாக ஜெர்மன் விளங்குகிறது, அதாவது, இவர்கள் தூய ஜெர்மன் மொழியில் எழுதுகின்றனர் மற்றும் சுவிஸ் கலந்த ஜெர்மன் மொழியில் பேசுகின்றனர்.

 

ரோமானிய மொழி

எங்காடின், முன்ஸ்டர் பள்ளத்தாக்கு, மத்திய க்ராவ்புண்டன் (Graubünden) மற்றும் சுர்செல்வாவில் ரோமானிய மொழி பொதுவான மொழியாக விளங்குகிறது. ரோமானிய மொழி ஒரு மொழி மட்டுமல்ல; சுர்சில்வான், சுட்சில்வான், சுர்மிரான், புட்டர் மற்றும் வல்லாடர் ஆகிய 5 பழமொழித் தொகுப்புகளின் குடும்பமாகவும் விளங்குகிறது. Sursilvan, Sutsilvan, Surmiran, Puter மற்றும் Vallader.

 

இத்தாலியன்

Puschlav, Bergell, Misox மற்றும் Calanca ஆகிய நான்கு பள்ளத்தாக்குகளில் இத்தாலிய மொழி பேசப்படுகிறது.