சமூக மற்றும் கலாச்சார வாழ்வு

சமூக மற்றும் கலாச்சார வாழ்வு

நான் எவ்வாறு சமூக மற்றும் கலாச்சார வாழ்வில் பங்கேற்பது?

நீங்கள் சுவிசில் உங்களை ஒருங்கிணைத்து கொள்வது மற்றும் திருப்திகரமாக வாழ்வதற்கு முக்கியமானது, சமூக மற்றும் கலாச்சார வாழ்வில் பங்கேற்பதாகும்.. பல உள்ளுராட்சி மண்றங்களில் பல்வேறு எண்ணிக்கையான கலாச்சார நிகழ்வுகள் உள்ளன- நாடக மேடையேற்றங்கள் தொடக்கம் பாடல் கச்சேரிகள் எனப் பலவிதமான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இவ் வசதிகள் குறித்து சிறப்பாக உங்கள் சக தொழிலாளர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். சுவிஸ்-கழகங்களின் நாடு எனவும் கருதப்படுகின்றது. பல மனிதர்கள் தமது ஓய்வு நேரத்தை ஒன்றுசேர்ந்து கழிப்பதற்காக கழகங்களில் இணைந்து செயற்படுகின்றனர். கழகங்கள் பல்வேறு துறைகளில் உள்ளன: இசை, விளையாட்டு, கலாச் சாரம், இயற்கை மற்றும் இன்னும் பல.- இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பலர் இதற்கான வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தி அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்ளவார்கள்.

 

கலாச்சார நிகழ்வுகளுக்குச் செல்வது அல்லது ஒரு கழகத்தில் சேர்ந்து செயற்படுவது, மக்களை கண்டு பழகுவதற்கான சிறந்த சந்தர்ப்பம் என்பதுடன் சுவிஸ் சமூகம் மற்றும் இந்த நாடு குறித்து ஓரளவு அறிந்து கொள்வதற்கு வசதியை ஏற்படுத்தும்.. இதன்மூலம் நீங்கள் உள்ளுரில் பேசப்படும் மொழியறிவை சிறப்பாக்குவதற்கும், தொடர்பு வலையை விரிவுபடுத்துவதற்கும், மற்றும் உள்ளுராட்சிசபையில் நன்கு கால் ஊன்றுவதற்கும் ஏதுவாகும்..