பெண் முதியோர்கள் மற்றும் ஆண் முதியோர்கள்

பெண் முதியோர்கள் மற்றும் ஆண் முதியோர்கள்

பெண் மற்றும் ஆண் முதியோர்களுக்கு எவ்விதமான வசதிகள் உள்ளன?

முதியோர் எனும் விடயம் குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் ஆலோசனை வசதிகள் உள்ளன. இது குறித்த கேள்விகள் இருப்பின் முதலில் நீங்கள் கிராமியசபையையோ அல்லது பிரதேச சுகாதார நடுநிலையத்தையோ அணுக வேண்டும்.. சில கிராமியசபைகள் விசேட தகவல்- மற்றும் துறைசார் நிலையங்களையும் நிறுவியுள்ளன. சுகாதாரத்தை ஊக்குவிப்பது, வசித்தல், நாளாந்த வாழ்வை திட்டமிடல், நோயாளர் கவனிப்பு மற்றும் பராமரிப்புப் போன்றவைகளுக்கான விபரமான தகவல்கள்; முதியோருக்கான வழிகாட்டி Graubünden“ எனும் தகவல் தளத்தில் உள்ளது.

ஆலோசனை நிலையம் Pro Senectute Graubünden

Pro Senectute சுவிசில் முதியோருக்கான இலாப- நோக்கற்ற மிகப்பெரிய தனியார் அமைப்பாகும்.. முதியோர் மற்றும் அவர்களது உறவினர்கள் Chur, Thusis, Ilanz, Ftan மற்றும் Samedan ல் உள்ள பிரதேச ஆலோசனை நிலையங்களில் நம்பிக்கையாக, இலவசமாக மற்றும் இரகசியமாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த சேவைப் பராமரிப்பு வசதிகள் தனிப்பட்ட சமூக, மற்றும் நிதி குறித்த ஆலோசனைகள், கற்பதற்கான ஏற்பாடு, சுகாதாரத்தை ஊக்குவித்தலும் நோயை தடுத்தலும் போன்ற பொதுப்பணி வேலைகளை உள்ளடக்குகின்றது..

தொடர்பு

  • Beratungsstelle Pro Senectute Graubünden

    ஆலோசனை நிலையம் Pro Senectute GraubündenAlexanderstrasse 27000 Chur081 252 75 83www.gr.pro-senectute.ch