சொந்த விருப்பிலான வேலை

சொந்த விருப்பிலான வேலை

சொந்த விருப்பிலான வேலை என்பதை எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்?

சுவிசில் வசிக்கும் நாலில் ஒரு பகுதி மக்கள் நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட சொந்த விருப்பில் செய்யும் வேலைகளை செய்கின்றனர். இவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளை சொந்த விருப்பில் செய்வதுடன், இதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை சொந்தவிருப்பிலான வேலை என அழைப்பர்.

 

வேலைக்கு அமர்த்துவதை கழகங்கள், பொதுப்பணி அமைப்புகள், அரசியல் அல்லது பொது நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. சொந்த விருப்பில் செய்யும் வேலைகள் கலாச்சார, சுற்றச்சூழல், விளையாட்டு, அரசியல், அயலவருக்கான உதவி, சமூக, ஆலய மற்றும் எமது மக்களின் பல்வேறு துறைகளில் இடம்பெறுகின்றது.

தொடர்பு

தொடர்பு

  • Benevol Graubünden Fach- und Vermittlungsstelle für Freiwilligenarbeit

    Benevol Graubünden சொந்தவிருப்பில் ஆற்றும் வேலைகளுக்கான துறைசார்- மற்றும் தகவல் தரும் நிலையம்Steinbockstrasse 27000 Chur081 258 45 84www.benevol-gr.ch

«Dossier சொந்தவிருப்பில் முன்வந்து செயற்படல்»என்றால் என்ன?

சொந்தவிருப்பில் செய்யும் வேலையில் அடங்குபவைகளுக்கு கழகங்கள் மற்றும் அமைப்புகள் தமது உறுப்பனர்களுக்கு, அவர்கள் சொந்த விருப்பில் ஆற்றிய பணிகளுக்காக ஒரு அத்தாட்சியை வழங்குவர். இதன்மூலம் அவர்கள், சொந்த விருப்பத்தில் பணிசெய்தவர்களின் வேலைகளை முக்கியமானவைகளாகவும் பெறுமதியானவைகளாகவும் கருதுவர். ஒருவர் ஆற்றிய

 

வேலை நேரங்களை ஒரு பட்டியலில் நிரப்புவதுடன் கழகத்தின் அல்லது அமைப்பின் அத்தாட்சியுடன் சேர்த்து ஒரு கடித உறையில் பாதுகாத்து வைக்கலாம். இதன்மூலம் ஒருவர் தாம் செய்த திறமைகள் மற்றும் ஆற்றல்களை காண்பித்துக் கொள்ளலாம்.. இதனூடாக சொந்தவிருப்பில் செய்த வேலைகள் மதிக்கப்படுவதுடன் அவை ஊதிய வேலைக்குச் சமமாகக் கணிக்கப்படும்.. இந்த Dossier என்னும் தொகுப்பை ஒருவர் வேலை தேடும்போது பாவித்துக் கொள்ளலாம். இவ்வாறு முன்வந்து பணியாற்றிய ஊழியர்கள் எங்கும் பெறு மதியானவர்களாகக் கணிக்கப்படுவார்கள்.