சுவிசில் வசிக்கும் நாலில் ஒரு பகுதி மக்கள் நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட சொந்த விருப்பில் செய்யும் வேலைகளை செய்கின்றனர். இவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளை சொந்த விருப்பில் செய்வதுடன், இதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை சொந்தவிருப்பிலான வேலை என அழைப்பர்.
வேலைக்கு அமர்த்துவதை கழகங்கள், பொதுப்பணி அமைப்புகள், அரசியல் அல்லது பொது நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. சொந்த விருப்பில் செய்யும் வேலைகள் கலாச்சார, சுற்றச்சூழல், விளையாட்டு, அரசியல், அயலவருக்கான உதவி, சமூக, ஆலய மற்றும் எமது மக்களின் பல்வேறு துறைகளில் இடம்பெறுகின்றது.