நூலகம்

வாசிகசாலை மற்றும் விளையாட்டுக்களை இரவல் பெறும் நிலையம்

வாசிகசாலை மற்றும் விளையாட்டுக்களை இரவல் பெறும் நிலையம்

பெரிய உள்ளுராட்சிமண்றங்களில் பொது நூல்நிலையங்கள் உள்ளன. இது குறித்த தகவல்களை உங்கள் குடியிருப்பாளர் பதிவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 

உயர்பாடசாலைகள் மற்றும் தொழிற் கல்லூரிகளின் நூல்- மற்றும் நுண்கலை நிலையங்களில் ,பொதுமக்கள் உட் பிரவேசிப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி உண்டு., அவைகளின் இணையத்தளத்தில், அங்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் திறந்திருக்கும் நேரங்கள் குறித்த விபரமான தகவல்களைக் காணலாம்.   

 

Graubünden மாநில நூல்நிலையம்

Graubünden மாநில நூல்நிலையம் Chur ல் உள்ளது. இது உயர்கல்வி, தொழிற்கல்வி- அதேபோன்று Graubünden ன் பண்டைக்காலப் பதிவுகளைக் கொண்ட நூல்நிலையம் என்பதுடன், விரிவான அளவில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் ஏடுகளைக் கொண்டுள்ளதுடன், இலக்கியம், சினிமா மற்றும் இசை போன்ற பகுதிகளையும் கொண்டுள்ளது.

 

தொடர்பு

  • Kantonsbibliothek Graubünden

    மாநில நூல்நிலையம்Karlihofplatz7001 Chur081 257 28 28www.kantonsbibliothek.gr.ch