EU/EFTA சார்ந்த குடிமக்களுக்கான வசிப்பிட அனுமதிகளுக்கு நீங்கள் சுவிட்சர்லாந்து வருவதற்கு முன்பாகவும் அல்லது வந்த பிறகும் கூட விண்ணப்பிக்கலாம். (EU/EFTA ல் உறுப்பினராக இல்லாத) மற்ற நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பணியில் இருந்தால் அவர்களுக்கான வசிப்பிட அனுமதி விதிவிலக்கான ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படும். அதாவது, அவர்கள் தகுதி வாய்ந்த பணியாளர்களாக இருக்க வேண்டும் அல்லது சிறப்பு அடிப்படையில் விதிவிலக்கு அளிக்கப்படுவதை அவர்கள் நியாயப்படுத்துவது அவசியமாகும்.
EU/EFTA சார்ந்த குடிமக்கள் எந்த வகை வசிப்பிட அனுமதி பெற்றிருந்தாலும், பொதுவாக அவர்களின் நெருங்கிய உறவுகள் இணைந்து கொள்ளலாம். நெருங்கிய உறவுகள் என்பது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்குப் பொருந்தும். பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிப்பிட அனுமதி பெற்றிருந்தால், அவர்கள் தங்களின் கணவன்/மனைவி மற்றும் குழந்தைகள் தங்களுடன் சேர்ந்து வசிக்க விண்ணப்பிக்கலாம். காவல்துறை மற்றும் பொதுச் சட்டத்துக்கு உட்பட்டு இதற்கான சட்டபூர்வத் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். நெருங்கிய உறவுகள் இவ்வாறு பின்னர் குடிப்பெயர்வு செய்வதற்கான வேண்டுகோள் 5 ஆண்டுகளுக்குள்ளாகவும், 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளாக இருந்தால் ஓராண்டுக்குள்ளாகவும் விண்ணப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.