பாடசாலைப் பிள்ளைகளின் உதவி

பள்ளி உளவியல் சேவை

பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது?

ஒரு பிள்ளைக்குப் பாடசாலையில் பிரச்சினைகள் இருப்பின், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பாடசாலை உளவியல் சேவை ஆலோசனை வழங்குகின்றது. சில பிள்ளைகள் குறைவான புள்ளிகள் எடுப்பதுடன் அவர்கள் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். வேறு சிலர் எதுவித அக்கறையுமின்றி பாடசாலையில் சோம்பேறிகளாக இருப்பர். வேறு சிலர் சரியான கவனமின்றி இருப்பார்கள் அல்லது பாடங்களின்போது குழப்படி செய்வார்கள் அல்லது ஒரு பிள்ளை பாடசாலை மாணவர் ஒருவரின் காரணமாக பாடசாலைக்குச் செல்ல விரும்பாதிருக்கலாம்.

 

ஆண் அல்லது பெண் உளவியர் நிபுணர் பிள்ளையுடனும் பெற்றோருட னும் கலந்துரையாடுவார். அவர்கள் இதைத் தெளிவுபடுத்துவதற்காக சில சோதனைகளைச் செய்வார்கள். இதன் பெறுபேறுகளை வைத்து பிள்ளைக்கு எவ்விதம் உதவலாம் என உளவியல் நிபுணர் ஆலோசனை வழங்குவார்.

 

உளவியல் நிபுணர் பிள்ளைக்கு ஒரு சிகிச்சையை அல்லது ஒரு மேலதிக பாடத்தை அல்லது வேறு பாடசாலைத் திட்டத்திற்கு மாற்றும்படி முன்மொழியலாம். சில வேளைகளில் அவர் பிள்ளைக்கு எவ்வாறு மேலதிகமாக உதவியும் ஊக்கமும் கொடுக்கலாம் என ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

 

Graubünden மாநிலத்தில் பாடசாலை உளவியல் சேவை பல வித்தியாசமான பிரதேச நிலையங்களில் உள்ளது.