பாடசாலைப் பிள்ளைகளின் உதவி

பிறமொழிபேசும் பிள்ளைகள்

பிறமொழிபேசும் பிள்ளைகளுக்கு எவ்வித வசதிகள் உள்ளன?

அந்த பாடசாலை அமைந்திருக்கும் இடத்து மொழியை பேசாத பிள்ளைகளுக்கு, விசேட உதவி வகுப்புகள் உள்ளன. இந்த மேலதிக கற்கை இலவசமானது. அதிகமாக பிள்ளைகள் இந்த வகுப்புகளுக்கு ஒன்று தொடக்கம் இரண்டு வருடங்கள் செல்வார்கள்.

 

Graubünden மாநிலத்தின் மிகச் சில உள்ளுராட்சிசபைகள் புதிதாகக் குடிவரும் பிறமொழிப் பிள்ளைகளுக்கு ஒத்துழைத்து முன்னேறும் வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்பில் பிள்ளைகள் அரை அல்லது முழு வருடத்திற்கு மிக விரைவாக பாடசாலை மொழியை பாடசாலையில் முன்னேறிச்செல்வதற்காகப் பெற்றுக்கொள்வார்கள்.

 

சொந்தமொழி மற்றும் கலாச்சாரம் (HSK) கற்பது சொந்த விருப்பிலாகும், இதைச் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. இங்கு சென்று பிள்ளைகள் அவர்களது மொழி, கலாச்சார அறிவை விருத்தி செய்து கொள்வார்கள். பெற்றோர் சங்கங்கள் அல்லது தூதராலயங்கள் இவ்வாறான வகுப்புகளை ஒழுங்கு செய்கின்றன. ஒரு பிள்ளை தனது தாய்மொழியை நன்கு பேசுமானால், உள்ளுர் மொழியைக் கற்பது இலகுவாக அமையும்.