பாடசாலை

இடைநிலைப்பள்ளி பிரிவு I

எனது பிள்ளை இடைநிலைப்பள்ளி பிரிவு I க்கு அனுமதிக்கப்படுகின்றது. இது எவ்வாறு நடைபெறுகின்றது?

ஆரம்பப்பள்ளியின் பின்னர் உங்கள் பிள்ளை இடைநிலைப்பள்ளிக்கு மாறுகின்றது. ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒரு முன்மொழிவை மேற்கொண்டு, எந்த விதமான பாடசாலைக்கு உங்கள் பிள்ளை அனுப்பப்படவுள்ளது எனத் தெரிவிப்பார். இதன்போது பாடசாலையில் அவர்களது புள்ளிகள் மற்றும் அவர்களது நடைமுறை கவனத்தில் எடுக்கப்படும். இதன்படி, பிள்ளை எவ்வாறு பாடங்களில் அக்கறை, ஊக்கம், தானாகக் கற்றுக் கொள்வது மற்றும் நம்பிக்கை கொள்வது போன்றவைகளை எடுத்துக் காட்டும்.

 

நீங்கள் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவில்லையானால், ஆசிரி யருக்கு இதுபற்றி நீங்கள் அறிவியுங்கள். முடிவு பாடசாலைப் பராம ரிப்பு (உள்ளுர் பாடசாலைத்திணைக்களம்) என்பதனால் எடுக்கப்படும். இந்த முடிவிற்கு எதிராக பெற்றோர் மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க லாம்.