நடுத்தரப் பாடசாலை

நடுத்தரப் பாடசாலை

நடுத்தரப் பாடசாலை என்றால் என்ன?

முதலாவது ஒன்பது பாடசாலை வருடங்களும் சுவிசில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாயமானதாகும். கட்டாய பாடசாலைக்குப் பின்பான உயர் பாடசாலைக் காலத்தை நடுத்தரப் பாடசாலை அதேபோன்று உயர்கல்லூரி, மாநிலப் பாடசாலையை, „கிமி“ அல்லது „கன்ரி“ என அழைப்பர். இவைகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பமாகும். இந்த நடுத்தரப் பாடசாலைக்குச் செல்வதற்கு நல்ல பாடசாலைப் பெறுபேறுகளைப் பெறுவது முன் நிபந்தனையாகும். இந்த நடுத்தரப் பாடசாலையில் ஒரு பல்கலைக்கழகத் தகுதிக்கான தேர்வு கிடைக்கும். பின்பு ஒரு துறைசார் கல்வியை கற்பதற்கு அதாவது பல்கலைக் கழகம் செல்வதற்கு இது தேவைப்படும். தொழில் துறைசார் உயர் கல்விகளைக் கற்பதற்கான நடுத்தரப் பாடசாலைகளும் உள்ளன.