சிறுபிள்ளைகள்

மொழியை கற்றல்

எனது பிள்ளை உள்ளுர் மொழியைக் கற்பதற்கு எது உதவும்?

பிள்ளைகள் தமது தாய் மொழியை நன்கு சிறப்பாகப் பேசுவார்களானால், பின்பு அவர்கள் உள்ளுர் மொழியைக் இலகுவாக கற்றுக்கொள்வார்கள். ஆகவே: நீங்கள் உங்கள் பிள்ளையுடன் உங்கள் மொழியில் கதைப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

 

வீட்டுவேலைகளைச் செய்யும்போது உங்கள் மகள் மற்றும் மகனுடன் கதைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் உங்களுடன் கதைத்தால் அவர்கள் கூறுவதைக் கேட்பதுடன் அவர்களுக்கு மறுமொழி கூறுங்கள். நீங்கள் ஒன்றுசேர்ந்து வெளியே செல்லுங்கள் -விளையாட்டுத் திட லுக்கு, காடுகளுக்கு, கடற்கரைக்கு, மிருகக்காட்சிசாலை போன்ற வைக்கு. அங்கு எவற்றைக் காண முடிகின்றதோ அவை குறித்துப் பேசிக்கொள்வதுடன், சொற் தொடர்களை விரிவுபடுத்த நீங்கள் உதவுங்கள். நீங்கள் ஒன்றுசேர்ந்து படப்புத்தகங்களை; பார்வையிடுவதுடன் கதைகளைக் கூறுங்கள்.

 

விளையாட்டுத் திடலில் அல்லது விளையாட்டுக் குழுக்களில் உங்கள் பிள்ளை உள்ளூர் பிள்ளைகளுடன் பழகுவதிற்கு சந்தர்ப்பம் கிடைக்கலாம். புதிய மொழியில் புதிய சொற்களை அவர்கள் கற்பது குறித்து நீங்கள் மகிழ்வடையுங்கள். இது அவர்கள் மேலும் சொற்களைக் கற்பதற்கு உற்சாகம் கொடுக்கும்.

 

பத்திரங்கள்